News about Shoaib Akhtar, Virat Kohli in tamil: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் “4” சுற்றுடன் நாடு திரும்பியது. பாஸ்கிதான் மற்றும் இலங்கை அணிகளிடம் கண்ட அடுத்தடுத்த தோல்வி இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் தொடரில் இருந்து பாதியிலே வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இருப்பினும், தற்காலியாக ஃபார்ம் அவுட்டால் தவித்து வந்த முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 61 பந்தில் 122* ரன்கள் எடுத்து, தனது ஃபார்மை மீட்டெடுத்தார். அதோடு அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். ஆப்கான் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கோலி சதம் விளாசியதன் மூலம் தனது 71-வது சத தேடலை நிறுத்தினார். மேலும், நவம்பர் 2019க்குப் பிறகு எந்த வித கிரிக்கெட்டிலும் சதம் அடிக்காத அவர், தனது முதல் டி20 சதத்தையும் பதிவு செய்தார்.
இதையும் படியுங்கள்: கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்; பி.சி.சி.ஐ விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி
சாகித் அப்ரிடி கருத்து

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி, விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறவேண்டும். அவர் ஃபார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டால் அது நன்றாக இருக்காது. நீங்கள் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே அது நிகழ வேண்டும். ஆசியாவைச் சேர்ந்த மிகச் சிலரே அந்த முடிவை எடுக்கின்றனர்.
விராட் அப்படிச் செய்யும் போது அவர் அதை ஸ்டைல் ஆக செய்வார். அனேகமாக அவர் தனது கிரிக்கெட் வாழ்கையை தொடங்கிய அதே முறையில் செய்வார் என்று உணர்கிறேன்” என்று கூறியிருந்தார்.
அப்ரிடியின் இந்த சர்ச்சை கருத்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது அவரின் கருத்துக்கு இந்திய ரசிர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பலரும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, அப்ரிடியின் கருத்துக்கு அவரை தனது ட்விட்டர் பதிவு வாயிலாக வெளுத்து வாங்கி இருந்தார்.
இதையும் படியுங்கள்: ‘கோலியை விடுங்க… உங்க கதை எப்படி?’ அஃப்ரிடிக்கு பதிலடி கொடுத்த மாஜி வீரர்
சோயிப் அக்தர் கருத்து
இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது வாழ்க்கையை நீட்டிக்க, உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்று கூறி, அப்ரிடியின் சர்ச்சை கருத்துக்கு வழிமொழியும் வண்ணம் பேசி இருக்கிறார்.
அக்தர் இந்தியா இணைய பக்கத்திற்கு அளித்துள்ள பேட்டியில், டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு (ஆஸ்திரேலியாவில் நடக்கும்) கோலி ஓய்வு பெறலாம். மற்ற வடிவங்களில் தனது நீண்ட ஆயுளை நீட்டிக்க அவர் அவ்வாறு செய்யலாம். நான் அவராக இருந்திருந்தால், நான் பெரிய படத்தைப் பார்த்து அழைப்பு எடுத்திருப்பேன், ”என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே அப்ரிடி கூறிய கருத்துக்கு இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், தற்போது அக்தரின் கருத்து அந்த சர்ச்சையை தொடரும் வகையில் இருக்கிறது. தற்போது அவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளளில் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
இதையும் படியுங்கள்: T20 World Cup: அலைமோதும் ரசிகர்கள்… விற்று தீர்ந்த IND Vs PAK போட்டிக்கான டிக்கெட்டுகள்!
இதையும் படியுங்கள்: சென்னையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடும் அஸ்வின்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!
இதையும் படியுங்கள்: 15 மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆதரவு… பி.சி.சி.ஐ அடுத்த தலைவர் ஜெய் ஷா?