கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு உலகு கதவின் தாழ்ப்பாள் இழுத்து மூடப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கிரிக்கெட்டை விட பல மடங்கு ரசிகர்களை அதிகம் கொண்டிருக்கும் கால்பந்து விளையாட்டு டோட்டலாக ஷட் டவுன் செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் சோர்வில் இருக்க, வீரர்களோ தங்களுக்கு கிடைத்த இந்த ஊதியத்துடன் கிடைத்த ஓய்வை சிறப்பாக அனுபவித்து வருகின்றனர்.
'நீ வேணும்னா முட்டாளா இருந்துட்டு போ; ஆனா சைலண்ட்டா இரு' - யாரை சொல்றார் இவர்?
குறிப்பாக, போட்டிகள் இல்லாமல் வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதனால், 'Stay at Home Challenge' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பொழுதை கழித்து வருகின்றனர்.
அதாவது காலபந்துக்கு பதிலாக பாத்ரூமில் பயன்படுத்தப்படும் டிஷ்யூ ரோலரை கால்பந்தாக எண்ணி அதனை கொண்டு வார்ம் அப் செய்வது தான் இந்த சவாலின் முக்கிய நோக்கம்,
கால்பந்து வீரர்கள் அனைவரும் இந்த #StayatHomeChallenge ஐ வெற்றிகரமாக செய்து முடிக்க, நான் மட்டும் என்ன தொக்கா? என்று கால்பந்து சூப்பர் ஸ்டார் லயோனல் மெஸ்ஸியும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு செய்து முடித்திருக்கிறார்.
அந்த வீடியோ தான் இப்போது வைரல்....
அதுசரி... நம்ம பாத்ரூம்ல தண்ணி மட்டும் தான்...!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”