scorecardresearch

‘கல கல னு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு’: ஹர்பஜன்சிங் தமிழில் வாழ்த்து

ஹர்பஜன்சிங்கின் தமிழ் ட்வீட்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியிருக்கிறது.

Harbhajan Singh, Surjith Rescue live updates
Surjith Rescue live updates

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தமிழில் சென்னை தினம் வாழ்த்து கூறியிருக்கிறார். ‘கல கலனு ஊரு, கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு’ என குறிப்பிட்டார் அவர்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்தது முதல் தன்னை தமிழ்நாட்டுடன் அதிகம் ஐக்கியப்படுத்தி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசன் முழுவதும் அணியில் இடம் பிடித்தாரோ இல்லையோ, தமிழில் ட்வீட்களைப் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

ஐபிஎல் சிசன் முடிந்த பிறகும் சென்னை பாசத்தை ஹர்பஜன்சிங் விடவில்லை. இன்று சென்னை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஹர்பஜன்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு
என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் ’ என குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை : பத்து நாளில் சொந்த ஊர் இந்த இடம் தான்!!! To Read, Click Here

மெட்ராஸ் தினம் : 379வது சென்னை பிறந்தநாள்… சென்னை வாசிகளின் வாழ்த்து! To Read, Click Here

ஹர்பஜன்சிங்கின் தமிழ் ட்வீட்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியிருக்கிறது.

 

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Madras day harbhajan singh wishes

Best of Express