Advertisment

கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஸ்டார்ட் ஆகும் பவரு? - மனோஜ் திவாரி நக்கல்ஸ்

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தனது ட்விட்டரில், செம காண்டாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஸ்டார்ட் ஆகும் பவரு? - மனோஜ் திவாரி நக்கல்ஸ்

Ramesh Powar and Manoj Tiwary

கொரோனா காரணமாக ஊரடங்கு இன்னமும் அமலில் இருப்பதால், மக்களின் அன்றாட தேவை துறைகள் மட்டுமே பெரும்பாலும் இயங்கி வருகின்றன. சினிமா சுத்தமாக ரீஸ்டார்ட் ஆகாமல் உள்ளது. விளையாட்டு, இப்போதுதான் தான் தனது பயணத்தைக் தொங்கியுள்ளது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடத் தொடங்கி, விண்டீஸ் வெற்றியையே பதிவு செய்துவிட்டது.

Advertisment

மெல்ல மெல்ல கிரிக்கெட் உலகம் தன்னை இயக்க வைக்க முயன்று வருகிறது.

எனினும், வீரர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்தாண்டு எப்படியும் அணிக்குள் வாய்ப்பு கிடைத்துவிடும் என்று முயற்சி செய்துக் கொண்டிருந்த பல இளம் கிரிக்கெட் வீரர்கள், இந்த லாக்டவுனில் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து பறிகொடுத்த தருணங்கள் – ஸ்டோக்ஸ் மூவ்மெண்ட்டில் தவறிய வெற்றி

தங்களது எதிர்காலம் என்னவாக இருக்குமோ என்ற மனப் போராட்டத்தில் அவர்கள் இருப்பதாக தெரிகிறது.

ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், இந்திய வீரர் ராபின் உத்தப்பா ஆகியோர், தங்கள் மன அழுத்தத்தை கடந்து வந்த பாதை குறித்தும், மனதை பாஸிட்டிவாக வைத்துக் கொள்வது குறித்தும் பேசியுள்ளனர்.

முன்னாள் இந்திய வீரரும், பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ரமேஷ் பவார், மன அழுத்தத்தை போக்க '25 நாட்களுக்கு 25புஷ்-அப்ஸ்' என்ற முறையை ஆரம்பித்து, அதனை அவர் பலருக்கும் டேக் செய்து, அவர்களும் புஷ்-அப்ஸ் எடுக்கும்படி கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி தனது ட்விட்டரில், செம காண்டாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், "மன அழுத்தத்தில் அல்லாடும் மக்களை 25 புஷ்-அப்ஸ் எடுக்கும் முறையும், இன்னும் முட்டாள்த்தனமாக முன்வைக்கப்படும் பல்வேறு முறைகளும் எப்படி சரி செய்யும்? யாரை நன்கு தெரிந்தவர்கள் எனக்கு பாடம் எடுக்க முடியுமா?" என்று சற்று காட்டமாகவே கேட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள பவார், "நீ தனிமையில் இல்லை" என்பதை உணர்த்தவே இந்த புஷ்-அப்ஸ் முறை செய்யப்படுகிறது. ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும் என்பதன் வெளிப்பாட்டின் காரணமாகவே இந்த முயற்சியை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு காம்ப்ரமைஸ் ஆகவில்லையே என்னவோ, ரமேஷ் பவரின் விளக்கத்துக்கு மனோஜ் பதில் ஏதும் அளிக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Manoj Tiwary
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment