இங்கிலாந்து பறிகொடுத்த தருணங்கள் – ஸ்டோக்ஸ் மூவ்மெண்ட்டில் தவறிய வெற்றி

சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2000-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 249/3 என்று வலுவான நிலையில் இருந்த போது, பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களில் ஹோல்டரிடம் 2ம் முறையாக இந்த…

By: Updated: July 15, 2020, 07:49:59 AM

சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2000-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.


2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 249/3 என்று வலுவான நிலையில் இருந்த போது, பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களில் ஹோல்டரிடம் 2ம் முறையாக இந்த டெஸ்ட்டில் ஆட்டமிழக்க வீழ்ச்சி கண்டது இங்கிலாந்து. அடுத்த 7 விக்கெட்டுகளை 64 ரன்களுக்கு இழந்து 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்ரியல் பிரமாதமாக வீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு ‘புரட்சித் தளபதி’ – வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்

வெற்றி பெற 200 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், காம்பெல் தொடக்கத்திலேயே காயம் அடைந்து வெளியேற, பிரத்வெய்ட், புரூக்ஸ், ஷேய் ஹோப் விக்கெட்டுகளை இழக்க,  நம்பிக்கை தகர்ந்தது. ஒரு கட்டத்தில் 27/3 என்று இருந்தது, அதாவது காம்பெல்லையும் சேர்த்து உண்மையில் 4 வீரர்களை இழந்திருந்தது.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜெர்மைன் பிளாக்வுட் நின்றார். தன் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு இன்னிங்சை ஆடி 154 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்து வெளியேறினார், ஆனால் மே.இ.தீவுகள் வெற்றியை உறுதி செய்து விட்டுத்தான் ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் 9 ஓவர்களில் 45/3 – கேப்டன் செய்த பிழை

45/3 என்ற நிலையில், பிளாக்வுட்-க்கான கேட்சை நழுவ விட்டார் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ். பிளாக்வுட் அடித்த பந்து டாப் எட்ஜ் ஆக, தனது பீல்டிங் பொசிஷனில் வலது பக்கம் ஸ்டோக்ஸ் நகர, கேட்ச் இடது பக்கம் வர, டைவ் அடித்தும், அவரது விரல்களில் பட்டு பந்து கடந்து செல்ல, அங்கே தப்பித்தார் பிளாக்வுட். படுத்தது இங்கிலாந்து.

வெ.இ 73/3, 27 ஓவர்களில்

இம்முறை கேப்டன் ஸ்டோக்ஸ் பந்து வீச, இம்முறை பிளாக்வுட் லெக் சைடில் புல் ஷாட் ஆட முயன்று, பந்தை தவறவிட, விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் டைவ் அடித்தும் பந்தை துல்லியமாக கேட்ச் பிடிக்க முடியவில்லை. அல்ட்ரா எட்ஜில் பந்து கிளவுஸில் பட்டுச் சென்றது தெரிந்தது.

ரிவியூ சென்றிருந்தால், பிளாக்வுட் அவுட்டாகி இருப்பார். இந்த வாய்ப்பையும் இழந்தது இங்கிலாந்து.

நல்ல டீம்னால 2011-ல் ஜெயிச்சார் தோனி: கம்பீர் – அப்போ 3 தடவை சிஎஸ்கே கப் அடிச்சது எப்படி பாஸ்?

90/3, 31 ஓவர்களில் 

ஸ்டோக்ஸ் ஓவரில், பிளாக்வுட் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்றிருந்த ரோரி பர்ன்ஸ் தவறவிட, மூன்றாவது வாய்ப்பையும் இழந்தது.

கடைசியில் 200/6 என்று வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட், ஸ்டோக்ஸ் 2 விக்கெட். ஆட்ட நாயகனாக ஷனன் கேப்ரியல் தேர்வு செய்யப்பட்டார். வெ.இ1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

அடுத்த டெஸ்ட் ஓல்ட் ட்ராபர்டில் நடக்கிறது, இதில் வெஸ்ட் இண்டீஸ் வென்றால் 1988-க்குப் பிறகு இங்கிலாந்தில் தொடரை வெல்ல வாய்ப்புள்ளது. ஆனால் இந்தப் போட்டிக்கு ஜோ ரூட் வந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:England vs west indies missed chances on day 5

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X