நல்ல டீம்னால 2011-ல் ஜெயிச்சார் தோனி: கம்பீர் – அப்போ 3 தடவை சிஎஸ்கே கப் அடிச்சது எப்படி பாஸ்?

ஆயிரம் முறை அல்ல; லட்சம் முறை அல்ல, கோடி முறை சொல்லியாகிவிட்டது தோனி ஒரு ‘அதிர்ஷ்ட கேப்டன்’ என்று. தோனியை பிடித்த சிலர் கூட இதை ஆமோதிக்கின்றனர். தோனியை வெறுப்பவர்களுக்கு சொல்லவா வேண்டும்? அவர் ஓய்வுப் பெற்றாலும் கூட, தேய்ந்த ரெக்கார்டைப் போல இதையே சொல்லிக் கொண்டு தான்…

By: Updated: July 15, 2020, 07:57:41 AM

ஆயிரம் முறை அல்ல; லட்சம் முறை அல்ல, கோடி முறை சொல்லியாகிவிட்டது தோனி ஒரு ‘அதிர்ஷ்ட கேப்டன்’ என்று. தோனியை பிடித்த சிலர் கூட இதை ஆமோதிக்கின்றனர். தோனியை வெறுப்பவர்களுக்கு சொல்லவா வேண்டும்? அவர் ஓய்வுப் பெற்றாலும் கூட, தேய்ந்த ரெக்கார்டைப் போல இதையே சொல்லிக் கொண்டு தான் இருக்கப் போகிறார்கள். ஏனெனில், அவரை குறை சொல்ல அவர்களுக்கு வேறு காரணம் ஏதும் இருக்காது.

தற்போது, கம்பீரும் தோனியை ஒரு லக்கி கேப்டன் என்று 81வது கோடி முறையாக தெரிவித்திருக்கிறார்.

கம்பீர் என்ன சொன்னார் என்பதை பார்ப்பதற்கு முன்பு, ஒரு சிறு பிளாஷ்பேக்கை பார்த்துவிடுவோம்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகானுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

2005ம் ஆண்டு சடையனாக நீண்ட முடியோடு தோனி இந்திய அணிக்குள் வந்த போது, எவரும் அறிந்திருக்கவில்லை அவர் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்று.

பார்த்திவ் படேல் தொடங்கி, தினேஷ் கார்த்திக் வரை, இந்தியாவின் விக்கெட் கீப்பிங் போஸ்ட்டுக்கு கியூவில் நின்றுக் கொண்டிருந்தவர்களின் கனவுகளுக்கு அத்தோடு முடிவுரை எழுதினார். இனி சல்லடை போட்டு தேடினாலும், இவரைப் போன்ற விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைக்கப் போவதில்லை என்பதை தோனி நிரூபிக்க, மேற்சொன்ன விக்கெட் கீப்பர்களின் கனவு கனவாகவே கரைந்து போனது.

சரி, வலிமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், விதியின் காரணத்தால் கேப்டன்ஷிப் அவர் கையில் வந்து அமர, அதுவும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு இவரை கேப்டனாக்க அது ஷேவாக், கம்பீர், யுவராஜ், ஹர்பஜன் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு நிச்சயம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும்.

ஆனால், எவருமே நம்ப முடியாத வகையில், உலகக் கோப்பையை தட்டித் தூக்க, அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் தோனி.

அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக வலம் வந்த தோனி, உலகின் டாப் கேப்டன்களில் ஒருவராக கொண்டாடப்பட்டார். கம்பீர் போன்ற திறமை வாய்ந்த வீரர்களுக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை. கிடைத்த சில வாய்ப்பும் தாற்காலிகமாவே இருந்தன.

ஆகையால் தான், தோனி மீது இந்த வெளிக்காட்டமுடியாத கோபத்தை, ஆதங்கத்தை, வார்த்தைகள் மூலம் அவ்வப்போவது சில வீரர்கள் வெறுப்புகளாக உமிழ்வதை காண முடிகிறது.

இப்போது, கம்பீர் சொன்னான் மேட்டருக்கு வருவோம்,

மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும், தோனி வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்ததற்கு, அவருக்கு அமைந்த திறமையான வீரர்களே காரணம். 2011 உலகக் கோப்பையில் சச்சின், சேவாக், நான், யுவராஜ், கோலி, யூசுப் பதான் போன்ற மிகச் சிறந்த வீரர்கள் அணியில் இருந்ததால், தோனி கோப்பையை வெல்ல எளிதாக இருந்தது. கங்குலி பட்ட கடின உழைப்புக்கான பலனை தோனி அறுவடை செய்தார்.

டெஸ்ட் போட்டிகளிலும், தோனி சிறந்த கேப்டனாக இருந்ததற்கு ஜாகீர் கான் தான் முக்கிய காரணம். ஜாகீர் அணிக்கு கிடைத்ததில், தோனி ஆசீர்வதிக்கப்பட்டவர். இந்த அனைத்து பெயரும் கங்குலிக்கே போக வேண்டும்” என்றார்.

பென் ஸ்டோக்ஸ் ஜெர்சியில் இடம் பெற்றிருந்த இந்திய மருத்துவர் பெயர்! இதல்லவா பெருமை…

கம்பீர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான, சாத்தியமான வார்த்தைகளாக இருக்கட்டும். இருப்பினும், ஒரு சாமானியனாக கம்பீரிடம் முன்வைக்கும் கேள்வி என்னவெனில்,

சர்வதேச கிரிக்கெட் இல்லையென்றாலும், நீங்களும் அதில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற அடிப்படையில் கேட்கிறோம், ஐபிஎல்-ல் 3 முறை தான் வழிநடத்திய சிஎஸ்கே அணிக்கு கோப்பை வாங்கிக் கொடுத்தது மட்டுமின்றி, இதுவரை சிஎஸ்கே விளையாடிய அத்தனை சீசனிலும், பிளே ஆஃப் வரை முன்னேறியது எப்படி? நீங்கள் சொன்ன சச்சின், சேவாக், யுவராஜ், கோலி, நீங்கள் உட்பட எவரும் அந்த அணியில் விளையாடியது இல்லையே பாஸ்!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Gambhir about ms dhoni cricket news sports news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X