ஆப்கன் கிரிக்கெட்டில் ஒரு ‘புரட்சித் தளபதி’ – வேர்ல்டு கப் வாங்கிய பிறகே கல்யாணமாம்

ஆப்கன் வீரர் ரஷித் கானுக்கென இந்தியாவில் ரசிகர் கூட்டமே உள்ளது. ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி, எதிரணிகளை அவர் அண்ணன் ‘அடித்தால் அடி, மிதித்தால் மிதி, இடித்தால் இடி’ ரகத்தில் புரட்டியெடுக்க, பச்சக்கென்று ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். விக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள்…

By: Updated: July 15, 2020, 07:56:47 AM

ஆப்கன் வீரர் ரஷித் கானுக்கென இந்தியாவில் ரசிகர் கூட்டமே உள்ளது. ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி, எதிரணிகளை அவர் அண்ணன் ‘அடித்தால் அடி, மிதித்தால் மிதி, இடித்தால் இடி’ ரகத்தில் புரட்டியெடுக்க, பச்சக்கென்று ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

விக்கெட் எடுப்பது மட்டுமின்றி, ரன்கள் அடிக்கவிடாமல் தடுப்பதே இவரது அல்டிமேட் எய்ம். அதேபோல், எந்த விக்கெட்டாக இருந்தாலும் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். கிரிக்கெட்டில் ‘தகவமைத்துக் கொள்ளுதல்’ என்பது மிக முக்கியமான ஒன்று. ஒருவர் பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, பவுலராக இருந்தாலும் சரி… தகவமைத்துக் கொள்ளும் திறமை இருந்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். இதை நவீன கிரிக்கெட்டில் சிறப்பாக கையாண்டவர் டி வில்லியர்ஸ். இந்திய கேப்டன் விராட் கோலியையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்.

நல்ல டீம்னால 2011-ல் ஜெயிச்சார் தோனி: கம்பீர் – அப்போ 3 தடவை சிஎஸ்கே கப் அடிச்சது எப்படி பாஸ்?

ஆனால், 21 வயதே ஆன ரஷித் கான் இதனை அற்புதமாக செய்வது தான் மிகவும் ஆச்சர்யம்.

‘ரஷித் கான் உலக கிரிக்கெட்டுக்கு கிடைத்த சொத்து’ என்று பிரதமர் மோடியே 2018ம் ஆண்டு ரஷித்தை புகழ்ந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்நிலையில், ஆசாதி ரேடியோவுக்கு ரஷீத் அளித்துள்ள பேட்டியில், “ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்ற பிறகே நான் திருமணம் செய்து கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷித்தின் இந்த ஸ்டேட்மென்ட்டை கேட்ட நமக்கோ மைண்ட் வாய்ஸ் கோடம்பாக்கம் பக்கம் செல்ல, கட்டிடம் கட்டியாச்சாப்பா என்ற கேள்வியுடன் நாம் விடைபெற்றோம்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Sports News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rashid khan about marriage cricket news sports news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X