2007ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக் கோப்பைத் தொடரை அவ்வளவு எளிதில் இந்தியர்களால் ஜீரணித்திருக்க முடியாது. அதன் வலி அவ்வளவு கொடியது.
வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி படுதோல்வி சந்திக்க, தொடர்ந்து இலங்கையுடனும் தோற்க, உலகக் கோப்பையை விட்டு முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்டது இந்தியா.
தோனி எனும் மெகா கேப்டன் உருவாக்க வித்திட்ட தொடர் என்ற ஒரு ஆறுதலைத் தாண்டி, மற்றவை எல்லாம் ரணங்களே.
போயும் போய் வங்கதேசத்திடமா தோற்றோம் என இந்திய வீரர்களே வேதனையின் உச்சியில் தகித்த காலம் அது.
விவசாயியாக மாறி ஏழைகளுக்கு உதவுவேன்! அஸ்வினிடம் எதிர்கால திட்டம் பற்றி பேசிய ஹர்பஜன்...
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுத் துறை முடங்கிக் கிடக்க, வங்கதேச வீரர்கள் வீடியோ கால் மூலம் பேசி பொழுதைப் போக்கி வருகின்றனர்.
அதன்படி, வங்கதேச அதிரடி வீரர் தமீம் இக்பால் முன்னாள் கேப்டன் மஷ்ரபே மோர்டசாவுடன் வீடியோ மூலமாக பேசினார். அப்போது அவர்கள் பல விஷயங்களைப் பற்றி பேசினார்கள்.
மஷ்ரபே கூறுகையில், "வங்கதேசத்தின் மக்மதுல்லா, இந்தியாவின் விவிஎஸ் லக்ஷ்மணைப் போன்றவர். அவரால் ஒருநாள் முழுக்க கூட ரன் எடுக்காமல் ஆடவும் முடியும், அணிக்கு தேவைப்படும் போது அடித்து ஆடவும் முடியும். அவர் மட்டும் நான்காம் நிலை வீரராக களமிறங்கி இருந்தால், எந்நேரம் பல சாதனைகளை படைத்து மிகப்பெரிய பேட்ஸ்மேனாக உருவெடுத்து இருப்பார். நம்மிடம் லோ ஆர்டரில் அதிரடி வீரர்கள் இல்லை என்ற ஒரே காரணத்தினால், மக்மதுல்லா லோ ஆர்டரில் இறக்கப்படுகிறார். இதை நினைத்து நான் பலமுறை வேதனைப்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் ஒரு சிரிப்புடன் கடந்து சென்றுவிடுவார்" என்றார்.
பிறகு இருவரும் இந்தியாவை வீழ்த்தியது குறித்து தமீம் இக்பால் பேசுகையில், "அந்த மேட்ச் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு நீ என்னிடம் கூறினாய், சேவாக்குக்கு இன்-கட்டர் பந்து போடுவேன் என்று. முன்கூட்டியே உனக்கு எப்படி அது தெரிந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.
'ஒரேயொரு ஐபிஎல் ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையை மாற்றிவிடும்' - சஞ்சு சாம்சன்
இதற்கு பதில் அளித்த மோர்டசா, "சில சமயங்களில், இது உங்களுக்கான நாள் என்று ஒரு உணர்வு இருக்கும். நான் அன்று அப்படி தான் உணர்ந்தேன். ஏனெனில், உலகக் கோப்பைக்கு சில நாட்களுக்கு முன்பு தான் நமது சக வீரர் மஞ்சுரல் ராணா சாலை விபத்து ஒன்றில் பலியானார். இதனால், அவருக்காக அந்த போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும் என்று அனைவரும் நினைத்திருந்தோம்" என்றார்.
ஆனால், 2011 உலகக் கோப்பையில், வங்கதேசத்தில் வைத்தே அந்த அணிக்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தது இந்தியா. அதிலும், சேவாக் அன்று அடித்த அடி, இன்றும் இடியாய் அவர்கள் மனதில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.