/tamil-ie/media/media_files/uploads/2020/02/a60.jpg)
michael clarke and wife kyly confirm divorce
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் 'சாம்பியன்' கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
தோனி இந்திய அணியில் கேப்டனாக கோலோச்சிய போது, அவருக்கு 'முடிஞ்சா மோதிப்பாரு மொமன்ட்'களை ஏகத்துக்கும் வாரி இறைத்தவர் ஆஸி., கேப்டன் கிளார்க். அவரது தலைமையிலான ஆஸி., அணி இந்தியா வசமிருந்த உலகக் கோப்பையை 2015ல் கைப்பற்றியது.
'இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்ற கனவின் அருகில் கூட நான் செல்லவில்லை' - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்நிலையில், மைக்கேல் கிளார்க் தனது மனைவியை கைலை-யை (kyly) விவாகரத்து செய்துள்ளார். இருவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a62-300x186.jpg)
கைலை மாடலாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். இவர்களுக்கு 4 வயதில் கெல்சி லீ (Kelsey- Lee) என்ற மகளும் உள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a59-300x201.jpg)
இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
'எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க' - ஆர்சிபி மீது உரிமையுடன் கோபப்பட்ட கோலி
இதுதொடர்பாக இருவரும் விடுத்துள்ள அறிக்கையில், "நாங்கள் சேர்ந்து வாழ்ந்த நாட்களில் குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் அருமையான ஆதரவை பெற்றதை ஒப்புக் கொள்கிறோம். சிறிது காலம் பிரிந்து வாழ்ந்த பிறகு, ஒருமித்த மனதோடு பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளோம். இதன் மூலம் எங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நிர்வாகிக்க முடியும்" என்றுள்ளனர்.
விவாகரத்து மதிப்பு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.