Advertisment

"கண்ணாடிய திருப்பல; ஆட்டோ ஓடல" - ஆஸி., அணி சரிவுக்கு மைக்கேல் கிளார்க்கின் அரிய கண்டுபிடிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
michael clarke says Aussie cricketers ‘sucked up’ to Kohli & Co. to protect IPL deals

michael clarke says Aussie cricketers ‘sucked up’ to Kohli & Co. to protect IPL deals

கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். அவர்களது வேகத்துக்கும், மிரட்டலுக்கும் வேறு எந்த அணியும் ஈடு கொடுக்கவே முடியாது. அதிலும், 1997 டூ 2010 வரையிலான காலக்கட்டத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டுமெனில், அதற்கு மற்ற அணிகள் தண்ணீரில் நடந்து வந்தாலொழிய சாத்தியமில்லை.

Advertisment

'ஆளே இல்லாட்டியும் ஐபிஎல் விளையாடணும்' - ஹர்பஜன் லாஜிக் எடுபடுமா?

இந்த காலக்கட்டத்தில் கர்ணக் கொடூர அணியாக விளங்கியது ஆஸி.,

கில்கிறிஸ்ட்,

மேத்யூ ஹைடன்

ரிக்கி பாண்டிங்

சைமண்ட்ஸ்,

மைக்கேல் பெவன்

டேரன் லீமன்,

மெக்ரத்,

பிரட் லீ

கில்லெஸ்பே

என்று பெவிலியனில் இருந்து நடந்து வரும் போதே, வெற்றி மனப்பான்மையில் இருந்து மணிக்கு 400 கி.மீ வேகத்தில் பின்வாங்கிக் கொண்டிருக்கும் எதிரணி.

ஆனால், இன்று இருக்கும் ஆஸ்திரேலிய அணி இவற்றில் கால்வாசி கூட கிடையாது. எங்கு விளையாடினாலும் தோல்வி, தோல்வி... இலங்கை, பாகிஸ்தான் என்றால் வெற்றி என்ற ரேஞ்சுக்கு சென்றுவிட்டது.

இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது.

இந்த சூழலில், கிரிக்கெட் உலகில் புதிய சர்ச்சையை தொடக்கி வைத்திருக்கிறார் ஆஸி., முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

இதுகுறித்து பிக்ஸ்போர்ட்ஸ் பிரேக்பாஸ்ட்-ல் மைக்கேல் கிளார்க் கூறியதாவது, "கிரிக்கெட் ஆட்டத்தின் நிதிநிலைமைகளைப் பொறுத்தவரை இந்தியா எப்படி பலம் பொருந்தியது என்பதை அனைவரும் அறிவார்கள். சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி உள்நாட்டில் ஐபிஎல் தொடரிலும் சரி.

ஆஸ்திரேலிய அணி, சிலபல வேளைகளில் மற்ற அணிகளும் கூட கோலியையும் இந்திய வீரர்களையும் ஸ்லெட்ஜ் செய்ய பயந்து சுயநலன்களுக்காக இந்தியாவிடம் பணிந்து நடந்து கொண்டன. ஏப்ரலில் இந்தியாவில் வந்து ஆட வேண்டும், அதே வீரர்களுடன் ஆட வேண்டுமென்பதற்காக கோலியையும் பிறரையும் ஸ்லெட்ஜ் செய்ய பயப்பட்டனர்.

டாப் ஆஸ்திரேலிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய ஐபிஎல் அணிகளும் போட்டாப்போட்டி மேற்கொண்டன.

'தல' என்று அடைமொழி இருந்தாலே அவுட் ஆஃப் ஆர்டரில் தான் இருப்பார்களோ!!

வீரர்கள் என்ன நினைத்தார்கள் என்றால்: நான் கோலியை ஸ்லெட்ஜ் செய்யப்போவதில்லை. என்னை அவர் பெங்களூரு அணிக்கு எடுக்க வேண்டும். 6 வாரங்களுக்கு நான் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதிக வேண்டும், என்றே வீரர்கள் பலரும் நினைத்தனர்.

இந்த மாதிரி ஒரு காலக்கட்டத்தில்தான் ஆஸ்திரேலிய அணி மென்மையாகப் போனது, அதன் வழக்கமான ஆக்ரோஷ பாணி காணாமல் போனது" என்று கொளுத்திப் போட்டிருக்கிறார்.

இவர் சொன்ன காரணத்தினால் தான் ஆஸி., தூசியாக மாறியதா என்று தெரியாது. ஆனால், இன்று ஃபியூஸ் போன பல்பாக மாறியிருப்பது மட்டும் உண்மை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Ipl Michael Clarke
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment