Sandip G
மகேந்திர சிங் தோனியின் இறுதிக்கட்ட கிரிக்கெட் நாட்கள், சென்னை சூப்பர் கிங்ஸின் பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் மிளிரப்போகிறது. டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை உடைக்கு அவர் என்றைக்கோ விடை கொடுத்த நிலையில், நேற்று (ஆக.15) மாலை நீல ஜெர்ஸிக்கும் விடை கொடுத்திருக்கிறார். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த போது, டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருந்த போதே, தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தவர் தோனி. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பைக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் ஆடாமல், நீண்டகாலமாக ஒதுங்கியிருந்த போது, அவரது ஓய்வு குறித்த பேச்சுக்கள் அதிகரித்தன.
தோனி எனும் சர்வதேச கிரிக்கெட் வீரர் மங்கும் இந்த சூழலில், தோனி சிஎஸ்கே எனும் அணியின் ஐகானாக மிளிர்கிறார். இப்போது, தோனிக்கு எல்லாம் சி.எஸ்.கே தான், சி.எஸ்.கேவுக்கு எல்லாமே தோனி தான். தோனி தனது கொள்கைகளை விதைத்த ஒரு அணி, தனது தலைமையால் வளர்த்த ஓர் அணி, தனது வசீகரத்தால் தக்க வைக்கப்பட்ட ஒரு அணி, அதன் இருண்ட நாட்களில் அவரது ஒளியால் பொலிவு பெற்ற ஓர் அணி சிஎஸ்கே.. இந்த காரணங்களுக்காகவே ரசிகர்கள் அவரை 'தல' என்று அழைக்கிறார்கள்.
"தல இல்லாம உடல் எப்படி?”
தோனியின் புகழ் இதுதான். அவர் சென்னையில் ஒருவராக இருக்கிறார் - தமிழர் அல்லாதவர், நடிகர் அல்லாதவர், வாழ்க்கையை விட பெரிய ஹீரோ. ஒரேயொரு ஹீரா.
ஐபிஎல் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள, கடந்த சனிக்கிழமை சென்னையில் தரையிறங்கியபோது, தோனி பிளைன் மஞ்சள் நிற T-shirt அணிந்திருந்தார் என்பது தற்செயலாக நடந்திருக்கலாம். ஆனால், இனி இதுதான் நிரந்தமாகப் போகிறது. இனிமேல், தோனி எனும் கிரிக்கெட் வீரர், மஞ்சள் முழு ஸ்லீவ் ஜெர்சியில், மஞ்சள் pads மற்றும் மஞ்சள்ஹெல்மெட்ஸுடன் மட்டுமே காண முடியும். இனிமேல், நீங்கள் ஒரு கிரிக்கெட் களத்தில் தோனியைப் பார்க்க விரும்பினால், நீங்கள் ஒரு டிக்கெட்டுக்காக கோடை வெயிலின் கீழ் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும்.
‘தல’ அறிவித்த அதே நாளில் ஓய்வை அறிவித்த ‘சின்ன தல’
தன்னால் முடிந்த அனைத்தையும் நாட்டிற்குக் கொடுத்துவிட்டேன் என்ற திருப்தியுடன் அவர் நீல நிற ஜெர்சியை மடித்து வைத்திருக்கலாம் என்றாலும், சி.எஸ்.கே ரசிகர்கள், தங்கள் அணிக்காக தோனி இன்னும் நிறைய பங்களிக்க முடியும் என்று நம்புவார்கள். சி.எஸ்.கேவுக்கு அவர் ஒரு பேட்ஸ்மேனாக, விக்கெட் கீப்பராக, தலைவராக, வழிகாட்டியாக, 'மிக முக்கியமாக' அவர்களின் அடையாளமாகவும் தேவைப்படுகிறார். அவரது மெகா அதிரடி ஷாட்களின் திறன் குறைந்திருக்கலாம். அவரது ஹிட் 'கனெக்டிவிட்டி' திறன் குறைந்து போயிருக்கலாம். இது, 39 வயது ஒரு கிரிக்கெட் வீரரின் இலையுதிர் காலம். ஆனால் அவரது புத்திசாலித்தனம் மற்றும் கிரிக்கெட் அறிவு இன்னும் அப்படியே உள்ளன, அவர் இன்னும் ஒரு சேஸிங் பிளானிங் சிறந்த வீரராகவும், ஆசிய கண்டத்தின் நிலைமைகளில் ரன்களை திரட்டும் போதுமான தகுதி அவரிடம் இன்னும் உள்ளது. முந்தைய ஐபிஎல் சீசனில், அணியின் அதிகபட்ச ஸ்கோரர் (414) தோனி தான். அதுவும் 134 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன். குறிப்பாக, 23 சிக்ஸர்களை பறக்க விட்டிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அல்லது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போல் அல்லாமல், சி.எஸ்.கே அதிக பவர்-ஹிட்டர்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே தோனியின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. அவரது கேப்டன்ஷிப் திறனுக்கு அதிக விளக்கம் தேவையில்லை,. இந்த ஒரு தகுதிக்காகவே, அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும்.
இனி, போட்டிகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அதுகுறித்த விமர்சனங்களைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை, ஆண்டு முழுவதும் போராடுவதைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை, மேலும் ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளின் சுமையை அவர் தோள்களில் சுமக்க வேண்டியதில்லை. சி.எஸ்.கேவுக்காக ஆடும் போது, அவர் சுமைகளை சுமக்க வேண்டியிருக்கும். ஆனால், நாட்டுக்காக விளையாடுவதன் சுமை மிகப்பெரியது.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக, அவர் தனது ஆக்ரோஷத்தை குறைத்திருக்கலாம். இனி அந்த நிலை கிடையாது என்பதால், பழைய தோனியை அவர் வெளிப்படுத்தலாம். ஈவு இரக்கமில்லாத அந்த ஹிட்டர் தோனி வெளிவரலாம். அவரது விளையாட்டிலிருந்து காணாமல் போன கடந்த காலத்தின் அந்த 'மரண அடி' மீண்டும் வெளிவரலாம். விளையாடி ஓய்ந்த பிறகு, ஸ்டீபன் ஃப்ளெமிங்கைப் போலவே, அவர் சிஎஸ்கெவின் பயிற்சியாளராக ஒரு நாள் என்ட்ரி ஆகலாம்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ் தோனி
அவரது தொழில் வாழ்க்கையின் கடைசி ஆண்டுகள் எவ்வாறு வெளிவரும் என்பது அனுமானத்திற்கு கட்டுப்பட்டதாகும், ஆனால் இது மிகவும் உறுதியாக உள்ளது. அவருக்கு சி.எஸ்.கே தேவைப்படுவதை சி.எஸ்.கேவுக்கு அவர் அதிகம் தேவைப்படுகிறார். ஏனென்றால், அவர் சிஎஸ்கேவுக்கு நட்சத்திர மதிப்பை மட்டுமல்ல, ஒரு அடையாளத்தையும் தருகிறார். மேலும் சிஎஸ்கேவின் விளையாட்டு மற்றும் வணிகத்திற்கு தோனி தேவைப்படுகிறார். அவர் வெளியேறியதும் சிஎஸ்கே எனும் கிளப்பின் அடையாளம் சிதைந்துவிடும். நீங்கள் எங்கு பார்த்தாலும், அவரது கைரேகைகள் தெரியும் - அணியின் ஒற்றுமை, அவர்களின் அணுகுமுறை, துன்பத்தில் அவர்களின் அசைக்க முடியாத தன்மை என்ற அனைத்திலும் தோனி இருப்பார்.
இன்னும் சொல்லப் போனால், ஐ.பி.எல்லுக்கு கூட அவர் தேவைப்படுகிறார். நாட்டின் பிற பகுதிகளுக்கு, மஞ்சள் ஜெர்சியில் மட்டும் தோனியைப் பார்ப்பது கடினமாக இருக்கும். ஆனால் சி.எஸ்.கே மற்றும் சென்னையைப் பொறுத்தவரை, சூரியன் எவ்வளவு உஷ்ணத்தை உமிழ்ந்தாலும், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரிசைகள் இன்னும் நீளமாகும்,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.