தோனியின் செயலால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர்.. கெத்து காட்டிய தோனி!

இந்திய மதிப்பின் படி கிட்டத்தட்ட 7 கோடி வரையாகும்.

இந்திய மதிப்பின் படி கிட்டத்தட்ட 7 கோடி வரையாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தோனியின் செயலால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர்.. கெத்து காட்டிய தோனி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த நிதியாண்டில் அதிகளவு வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Advertisment

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, கடந்த 2016-ம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தோனி வருடத்தில் 1 மில்லியன் டாலர் வரை சம்பளம் பெறுகிறார். இந்திய மதிப்பின் படி கிட்டத்தட்ட 7 கோடி வரையாகும்.

தோனியை பிசிசிஐ அமைப்பு 'ஏ+' வீரர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியது. பின்பு தோனி டெஸ்ட் போட்டியில் ஒய்வு பெற்று ஏ+ கிரேடில் விளையாடி வந்தார். தற்போது சில வீரர்களின் அழுத்தத்தின் காரணமாக அவர் ஏ+ கிரேடில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவரின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது.

பாத்ரூமில் தோனியின் லூட்டி... லீக்கான வீடியோ!

இருந்தபோதிலும், அதிகமான விளம்பரங்கள், நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போன்றவற்றின் மூலம் தோனிக்கு ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வந்தது. அந்த வகையில் கடந்த 2016-17-ம் ஆண்டு எம்.எஸ். தோனி முன்தேதியிட்ட வருமான வரியாக ரூ.10.50 கோடி செலுத்தி இருந்தார்.

Advertisment
Advertisements

அதே போல் 2017-18 நிதி ஆண்டில் 12.17 கோடி வருமான வரி கட்டி தோனி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இதன் மூலம் கடந்த நிதி ஆண்டில் அதிக வருமான வரியை கட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

இதுக்குறித்து பிஹார் மற்றும் ராஞ்சி மண்டல வருமானவரித்துறை இயக்குநர் ஒருவர் கூறுகையில், தோனி ''கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான பிஹார் மற்றும் ஜார்கண்ட் மண்டலத்தில் தனிநபர்களில் அதிகமான வருமான வரி செலுத்தியதில் தோனி முதலிடத்தில் உள்ளார். அவரின் நேர்மை மற்றும் உண்மைதன்னை தங்களை பெரிதும் கவர்ந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Income Tax

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: