ms dhoni, sushant singh rajput, dhoni reaction on sushant singh rajput death, sushant singh rajput death, சுஷாந்த் சிங் ராஜ்புட், தோனி, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள், sushant singh rajput dhoni, dhoni sushant singh rajput, neeraj pandey, sushant singh rajput news
பாலிவுட் நடிகரும், தோனியின் பயோபிக் படத்தின் ஹீரோவுமான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுக் கிழமை, மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் உலுக்கியது.
Advertisment
வெறும் 34 வயதே ஆன, படத்திற்கு 5-7 கோடி சம்பளம் வாங்கும் இளம் நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது என்பது ஜீரணிக்க முடியாத சம்பவமாகும். இத்தனைக்கும், சினிமாவில் அவர் நடித்த படங்கள் நன்கு ஓடின. அவருக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன. குறிப்பாக, தோனியின் பயோபிக் படம், சுஷாந்திற்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துக் கொடுத்தது.
பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் சீராக, சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்த சுஷாந்தின் தற்கொலை, பாலிவுட் மீது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பாலிவுட் தன்னை அவர்களது குடும்பத்தில் ஒரு அங்கமாக ஏற்க மறுக்கிறது என்ற மன அழுத்தமே அவரது தற்கொலைக்கு காரணம் என்றே செய்திகள் வெளியாகின்றன.
தோனியின் பயோபிக் படத்தை தயாரித்தவரும், தோனியின் ஏஜெண்ட்டுமான அருண் பாண்டே இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "சுஷாந்த் இந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க காரணம், அவர் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு முன்பே, அவர் தோனியின் தீவிர ரசிகராக இருந்தார். தோனி, சுஷாந்தின் இன்ஸ்பையராக இருந்தார். சுஷாந்தும், சினிமா பின்புல குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, அவரும் தோனி போன்ற ஒரு சிறிய நகரத்திலிருந்து வந்தவர். அவர் எப்போதும், தோனியைப் போலவே, தன்னாலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பினார்" என்று தனது நினைவலைகளை பகிர்ந்திருந்தார்.
சுஷாந்த் மறைவு குறித்து தோனி இதுவரை அறிக்கையாகவோ, ஊடகம் வாயிலாகவோ எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், xtratime.in. யிடம், தோனி பயோபிக் படத்தின் இயக்குனர் நீரஜ் பாண்டே பேசுகையில், "ஞாயிற்றுக்கிழமை மதியம் தோனியை தொலைபேசி மூலம் அழைத்து, சுஷாந்த் மரணம் குறித்து தெரிவித்தேன். தோனிக்கு மட்டுமின்றி அவரது நெருங்கிய இரு நண்பர்களான மிஹிர் திவாகர், அருண் பாண்டே ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். தோனி, இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து நொறுங்கினார்" என்றார்.
"தோனி ரொம்பவே கவலையில் உள்ளார். இது மிகவும் ஒரு சோகமான சம்பவம். என்ன நடந்தது என்று எங்களால் கூட நம்ப முடியவில்லை. எனது வருத்தத்தை வெளிப்படுத்தும் நிலையில் நான் இல்லை" என்று ஏபிபி-யிடம் அருண் பாண்டே கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“