IND vs SL 2nd T20 Match 2020: இந்தியா இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி செவ்வாய்க்கிழமை இந்தூரில் நடைபெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, இங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
தன் திறமைக்கான உயரத்தை எட்டாமலேயே ஓய்வு அறிவித்த இர்பான் பதான்! (வீடியோ)
இதில், ஜனவரி 5 குவஹாத்தியில் நடைபெறவிருந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டி, மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்துவீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சரித்ததால் இலங்கையின் ரன் விகிதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.
ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஷர்துல் தாக்கூர் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில், கே.எல்.ராகுல் 45 ரன்களும், ஷிகர் தவான் 32 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அனி இந்த தொடரில் ஒரு வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
6,6,6,6,6 – ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு விலை! பிக் பேஷ் அட்ராசிட்டீஸ் (வீடியோ)
இந்திய டி20 அணி:
விராட் கோலி(c), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (wk), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துள் தாகூர், மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன். ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
Live Blog
India vs Sri Lanka 2nd T20 Score: இந்தியா இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முந்தைய ஆட்டத்துக்கான அணியில் இடம் பிடித்த வீரர்கள் இன்றைய ஆட்டத்திலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டு களம் காணும் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
மலிங்கா தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணியும் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. இந்த ஆண்டு கடைசியில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தங்களை சிறப்பாக தயார்படுத்தி கொள்வதில் முனைப்பு காட்டும் இந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் ஏற்கனவே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி அரங்கேறி இருக்கிறது. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. இவ்விரு அணிகளும் இன்று மோதுவது 18-வது முறையாகும். இதுவரை நடந்த 17 போட்டிகளில் இந்திய அணி 11 முறையும், இலங்கை அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிஆர்எஸ் அவுட் என அறிவிக்கப்பாட்டார்.
143 ரன்கள் இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் அற்புதமான தொடக்கத்தை கொடுத்தார். 45 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் கிளீன் போல்டானார். அப்போது இந்திய அணி 9.1 ஓவர்களில் 71 ரன்கள் சேர்த்து இருந்தது.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்துவீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சரித்ததால் இலங்கையின் ரன் விகிதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது.
இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை ஷர்துல் தாக்கூரும் குல்தீப் யாதவும் போட்டிக்கொண்டு வேட்டையாடினர். ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தினார் தாக்கூர்… இலங்கை அணி தனது எட்டாவது விக்கெட்டை இழந்து திணறுகிறது.
தாக்கூர் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட் ஆனார் தனஞ்ஜெயா… 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்
இந்தியாவின் ரெட் அலர்ட் ஓப்பனிங் பேஸ் பந்துவீச்சை எதிர்கொண்டு, பெரிய நெருக்கடி ஏதுமில்லாமல், இலங்கை 50 ரன்களை கடந்துள்ளது.
7 ஓவர்களுக்கு 53-1.
யய்யா பும்ரா.. ஏதாச்சும். பண்ணுய்யா!!!
சைனி எடுப்பாரு… பும்ரா எடுப்பாரு-னு பார்த்தா, நம்ம வாஷிங்டன் சுந்தர் எடுத்துட்டாப்ள… எத…
முதல் விக்கெட்டுப்பா!!!
யாரோ அவிஷ்காவாமே…. அந்த அபிஷ்டுவ, 22 ரன்னுல காலி பண்ணிருச்சு நம்ம வாஷிங்டன்
இலங்கை அணி நிதான தொடக்கத்துடன் ஆடி வருகிறது. 3 ஓவர்களுக்கு அந்த அணி 22 ரன்கள் எடுத்துள்ளது, விக்கெட் இழப்பின்றி…
நம்ம புமி… அதாங்க பும்ரா, ரொம்ப நாளைக்குப் பிறகு அணியில் களமிறங்க இருப்பதால், அவர் மீது எக்கச்சக்க பார்வை நமக்கு….
ஒரு யார்க்கர வுடு தல…..
பிளேயிங் லெவனில் ஆடும் இந்திய அணி வீரர்கள்:
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி(c), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துள் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.
டாஸ் வென்ற இந்திய அணி ஸ்கிப்பர் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
முதல் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட அதே இந்திய அணி, இப்போட்டியிலும் விளையாடுகிறது.