6,6,6,6,6 - ஒவ்வொரு பந்துக்கும் ஒவ்வொரு விலை! பிக் பேஷ் அட்ராசிட்டீஸ் (வீடியோ)
ஸ்பின்னர் அர்ஜுன் நாயர் வீசிய நான்காவது ஓவரின், முதல் பந்தை மட்டும் டாட் செய்த டாம் பென்டன், அடுத்த 5 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்ஸருக்கு அனுப்பி அலற வைத்துவிட்டார்
Tom Banton smashes five sixes in a row in BBL game cricket video - பிக்பேஷ் போட்டியில் அடிக்கப்பட்ட இரக்கமில்லா அரைசதம் கிரிக்கெட் வீடியோ
பிக்பேஷ் தொடரின் ஆட்டங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு செமத்தியாக தீனி போட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா தாண்டி, மிகவும் விரும்பிப் பார்க்கும் தொடர் இத்தொடரே. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புது அவதாரங்களை (புதிய வீரர்) நம்மால் காண முடியும்.
Advertisment
அதன் ஒரு பகுதியாக, நேற்று (ஜன.6) நடந்த போட்டியில் 'இந்தா வாங்கிக்க' மோடில் ஆடியிருக்கிறார் பேட்ஸ்மேன் ஒருவர்.
நேற்று சிட்னியில் நடந்த போட்டியில், சிட்னி தண்டர் vs பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.
மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் 8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர் டாம் பேன்டன் 19 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதில், 2 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.
குறிப்பாக, ஸ்பின்னர் அர்ஜுன் நாயர் வீசிய நான்காவது ஓவரின், முதல் பந்தை மட்டும் டாட் செய்த டாம் பென்டன், அடுத்த 5 பந்துகளையும் அடுத்தடுத்து சிக்ஸருக்கு அனுப்பி அலற வைத்துவிட்டார்.