/tamil-ie/media/media_files/uploads/2020/07/a199.jpg)
india test cricket, india test series, india cricket series, இந்தியா, பாகிஸ்தான், கிரிக்கெட் செய்திகள், india vs pakistan cricket, india vs australia cricket, india test cricket team, brad hogg
உலக கிரிக்கெட்டில் எந்த அணி இந்தியாவை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிராட் ஹாக், தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு அந்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ‘ஓரிரு காரணங்களுக்காக’ இது எதிர்காலத்தில் சாத்தியமற்றது என்பதால், ஆஸ்திரேலியா இந்த வாய்ப்புகளின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த நேரத்தில் இந்தியாவை அதன் மண்ணிலேயே தோற்கடிக்கும் அணியாக பாகிஸ்தானாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஏனெனில் அவர்களிடம் வலுவான வேகப் பந்துவீச்சும், சில நல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அவர்கள் பேட்டிங்கும் வலுவாக உள்ளது. மேலும் அவர்கள் இந்திய நிலைமைகளை நன்கு அறிவார்கள் ”என்று ஹாக் தனது யூடியூப் சேனலில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“ஆனால் அவர்கள் இரண்டு காரணங்களுக்காக இந்தியா செல்ல முடியாது. எனவே அடுத்த சிறந்த அணி ஆஸ்திரேலியா. எங்கள் பேட்டிங் வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் மார்கஸ் லாபுசாக்னே உள்ளனர். பந்துவீச்சிலும் சமமான திறன் கொண்டவர்கள் உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் இந்தியாவை வெல்ல முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.
நீங்க நல்லவரா? கெட்டவரா? - இந்திய ரசிகர்களை மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி
இங்கிலாந்து (2012/13 இல்) மற்றும் ஆஸ்திரேலியா (2004/05 இல்) மட்டுமே இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல முடிந்தது.
2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. உண்மையில், பாகிஸ்தான் இந்தியாவில் மொத்தமாகவே ஒரேயொரு டெஸ்ட் தொடரில் மட்டுமே வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. அதுவும் 1986/87 காலக்கட்டத்தில் நடந்த டெஸ்ட் தொடராகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.