Pakistan Cricketer Shoaib Akhtar On Fight Against COVID-19 : கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், அதனை தடுக்க அரசுடன் மக்களும் இணைந்து பொறுப்பான பல்வேறு முக்கிய பணிகளை ஆற்றி வருகின்றனர். இந்நோய் மனித குலத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். இந்த சவாலை சந்தித்து நாம் தாண்டிச் செல்வது எங்கனம் என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
மேலும் படிக்க : கேரளாவில் மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம்!
Pakistan Cricketer Shoaib Akhtar On Fight Against COVID-19
பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் ”இந்நேரத்தில் அனைவரும் மனித நேயத்துடன் செயல்பட வேண்டும். நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சக்தியாக செயல்பட்டு கொரோனா தரும் நெருக்கடியில் இருந்து தப்ப வேண்டும். உலகநாடுகள் பலவற்றிலும், இந்த கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மக்களுடன் கலந்து ஆலோசனை செய்வதில் எந்த பலனும் கிட்டப்போவதில்லை.
ابھی بھی وقت ہے۔ سنبھل جائیں ۔ گھر بیٹھ جائیں ۔ اس سے بہتر خدمت نہیں ہو سکتی اس وقت ملک کی۔ تاریخ کی صحیح سمت میں گنے جائیں گے۔ #COVID19outbreak #CoronaFreePakistan pic.twitter.com/eonrWunTwM
— Shoaib Akhtar (@shoaib100mph) March 22, 2020
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
பொருட்களை பதுக்காதீர்கள். பணக்காரர்கள் எப்படியும் தப்பித்து வாழ்ந்துவிடுவார்கள். ஆனால் ஏழைகளின் நிலையை கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். கடைகள் எல்லாம் காலியாக இருக்கிறது. நீங்கள் மூன்று மாதங்கள் கழித்து உயிர் வாழ்வீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மனிதர்களாக மனிதர்களைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டிய காலம் இது. இந்துக்களாகவோ இஸ்லாமியர்களாகவோ சிந்திக்காமல் மனிதர்களாக சிந்தியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும் கொரோனா வைரஸ் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி அப்டேட்களையும் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க : மலை கொரில்லாக்கள் கொரோனாவால் முழுமையாக அழியக்கூடும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.