‘இதுவே என் கடைசி வாய்ப்பு’ – பியூன் வேலைக்கு விண்ணப்பித்த இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்

எனக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. அரசு வேலை பெற எனக்கு இதுவே கடைசி வாய்ப்பு

By: July 28, 2020, 4:15:43 PM

இந்திய மாற்றுத் திறனாளிகள் ஒருநாள் அணியின் கேப்டனாக பணியாற்றிய தினேஷ் செய்ன் என்ற மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர், பொருளாதார சிக்கல் காரணமாக பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணாவைச் சேர்ந்த தினேஷ் 2015 முதல் 2019 வரை இந்திய மாற்றுத் திறனாளி அணிக்கு 9 போட்டிகளில் ஆடியுள்ளார். இதே காலக்கட்டத்தில் கேப்டனாகவும் இருந்துள்ளார். 35 வயதாகும் இவர் தன் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். நிரந்தர வருமானத்துக்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான (NADA)வில் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

“12வது படித்து முடித்தது முதல் கிரிக்கெட் தான் விளையாடுகிறேன். இந்தியாவுக்காக ஆடினேன், ஆனால் இப்போது பணம் இல்லை. 35 வயதாகும் நான் பட்டப்படிப்பு முதல் ஆண்டு படிக்கிறேன். NADA-வில் ஒரேயொரு பியூன் பணியிடம் காலியாக உள்ளது” என்று பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் செய்ன் தெரிவித்தார்.

இந்திய அணியின் ‘அடையாளம்’ சுரேஷ் ரெய்னா – மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

தினேஷ் செய்னின் மூத்த சகோதரர்கள் இவரது குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். ஆனால் இனியும் அப்படி வாழ வேண்டாமென முடிவெடுத்த தினேஷ், தற்போது தானாகவே முயன்று இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.


“இந்த பியூன் வேலைக்கு சாதாரணமானவர்களுக்கான வயது வரம்பு 25, மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு 35. எனவே எனக்கு இதுதான் கடைசி வாய்ப்பு. அரசு வேலை பெற எனக்கு இதுவே கடைசி வாய்ப்பு” என்கிறார் தினேஷ்.

மேலும் அவர் கூறும்போது, ‘பிறவியிலேயே போலியோ தாக்கி என் ஒரு கால் நிரந்தரமாக பாதிக்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் என்னை மாற்றுத் திறனாளியாகவே நான் உணராமல் செய்தது. 2015-ல் வங்கதேசத்தில் நடைபெற்ற 5 நாடுகள் பங்கேற்ற தொடரில் நான் தான் அதிக விக்கெட்டுகளை, அதாவது 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன். பாகிஸ்தானுக்கு எதிராக 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன்” என்றார்.

2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் இந்திய மாற்றுத்திறனாளி அணி சாம்பியன், ஆனால் அப்போது தினேஷ் நிர்வாகியாகச் சென்றிருந்தார்.

‘அந்த 7 தவறுகள்’ – அம்பயர் ஸ்டீவ் பக்னரை பஞ்சாமிர்தம் ஆக்கிய பதான்

அவர்கள் “என்னை அந்த அணியில் தேர்வு செய்யவில்லை, ஆனால் புதிய வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறு இணையச் சொன்னார்கள். நிறைய திறமை இருக்கிறது, உடல் ரீதியான அசவுகரியங்கள் ஒரு தடையில்லை. ஆனால் எங்களை யார் கவனித்துக் கொள்வார்கள்?

நான் இனி கிரிக்கெட் ஆடப்போவதில்லை, ஆனால் என் குடும்பத்திற்கு நான் வாழ்வாதாரம் அளிக்க வேண்டும், ஆட்டத்துடன் தொடர்ந்து நெருக்கமாகவே இருக்க விரும்புகிறேன்” என்று தன் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Physically challenged india cricket team applies former skipper for peons job

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement