Puneri Paltan vs Tamil Thalaivas, Semifinal 2 - Pro Kabaddi 2022 Tamil News: 9-வது புரோ கபடி லீக் தொடரில் மும்பையில் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் 2-வது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டன் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதையும் படியுங்கள்: சாம்பியன் வீரர் இருந்தும் அவங்க ஜெயிக்கல… பவன் ஷெராவத் இல்லாமலே இவங்க அடிச்சாச்சு..! மறக்க முடியாத தமிழ் தலைவாஸ் வெற்றி
புனேரி பல்டன்
லீக் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த புனேரி பல்டன் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. லீக் கட்டத்தில், அந்த அணி தமிழ் தலைவாஸுக்கு எதிரான இரண்டு பரபரப்பான ஆட்டங்களில் களமாடியது. இதில் ஒரு ஆட்டத்தில் 35-34 என்ற கணக்கில் வென்றனர், மற்றொன்றை அதே ஸ்கோர்லைனில் இழந்தனர். இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: ‘தவறுகளை திரும்பிப் பார்க்காதே..!’ அஷன்- நரேந்தர்- பவார் கூட்டணி வெற்றி மந்திரம் இதுதான்!
புனேரி பல்டன் அணியில் அஸ்லாம் இனாம்தார் (138 ரெய்டு புள்ளிகள்), ஆகாஷ் ஷிண்டே (131 ரெய்டு புள்ளிகள்) மற்றும் மோஹித் கோயத் (120 ரெய்டு புள்ளிகள்) ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். 51 டிஃபென்ஸ் புள்ளிகளை எடுத்துள்ள கேப்டன் ஃபாஸல் அட்ராச்சலி முன்னிலை வகித்து வருவதால், அவர்கள் டிஃபென்ஸ் ரீதியாக உறுதியாக உள்ளனர். சோம்பீர் (35 டிஃபென்ஸ் புள்ளிகள்), அபினேஷ் நடராஜன் (29 டிஃபென்ஸ் புள்ளிகள்), சங்கேத் சாவந்த் (28 டிஃபென்ஸ் புள்ளிகள்) போன்ற வீரர்களும் டிஃபென்சில் வலு சேர்க்கிறார்கள்.
தமிழ் தலைவாஸ்
எலிமினேட்டர் 2 சுற்றில் உ.பி. யோத்தாஸ் அணியுடன் டைபிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்று முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்துள்ளது தமிழ் தலைவாஸ். அணி ரெய்டிங் பிரிவில் பெரும்பாலும் நரேந்தர் மற்றும் அஜிங்க்யா பவார் ஆகியோரைத் தான் மலைபோல் நம்பியுள்ளது. இதில் நரேந்தர் இந்த சீசனில் 232 ரெய்டு புள்ளிகளை குவித்துள்ளார் மற்றும் அஜிங்க்யா பவார் (123 ரெய்டு புள்ளிகள்) மூலம் அவருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: புரோ கபடி அரை இறுதி: தமிழ் தலைவாஸ் – புனேரி பல்தான் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
45 ரெய்டு புள்ளிகளை எடுத்துள்ள ஹிமான்ஷு சிங் அடுத்த சிறந்த ரைடராக இருக்கிறார். அவர் டிஃபென்சிலும் கலக்கி வருகிறார். எனவே, அவர் இன்றைய ஆட்டத்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். டிஃபென்ஸ் வரிசையில், சாஹில் குலியா (54 டிஃபென்ஸ் புள்ளிகள்) மற்றும் சாகர் (53 டிஃபென்ஸ் புள்ளிகள்) அவர்களின் சிறந்த செயல்திறன் மிக்கவர்களாக இருந்தனர். அதே நேரத்தில் எம். அபிஷேக் மற்றும் மோஹித் முறையே 39 மற்றும் 30 டிஃபென்ஸ் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
நேருக்கு நேர்
புனேரி பல்டன் - தமிழ் தலைவாஸ் அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 3ல் புனேரி பல்டனும், 3ல் தமிழ் தலைவாசும் வென்றுள்ளன. 2 போட்டிகள் டையில் முடிந்துள்ளன.
புனேரி பால்டன் vs தமிழ் தலைவாஸ்: கவனிக்க வேண்டிய வீரர்கள்
புனேரி பால்டன்: ஃபேசல் அட்ராச்சலி
தமிழ் தலைவாஸ்: அஜிங்க்யா பவார்
புனேரி பால்டன்
ரைடர்ஸ்: அஸ்லாம் முஸ்தபா இனாம்தார், மோஹித் கோயத், ஆதித்யா துஷார் ஷிண்டே, ஆகாஷ் சந்தோஷ் ஷிண்டே, பங்கஜ் மோஹிதே, சவுரப்
டிஃபெண்டர்கள்: ஃபசல் அத்ராச்சலி, சோம்பிர், ஆகாஷ் சவுத்ரி, பாதல் தக்திர் சிங், அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த், அலங்கார் கலுராம் பாட்டீல், ராகேஷ் பல்லே ராம், டி மஹிந்த்ரபிரசாத், ஹர்ஷ் மகேஷ் லாட், கௌரவ் காத்ரி
ஆல்-ரவுண்டர்கள்: முகமது எஸ்மாயில் நபிபக்ஷ், கோவிந்த் குர்ஜார், பாலாசாகேப் ஷாஹாஜி ஜாதவ்.
இதையும் படியுங்கள்: மெஸ்ஸி vs எம்பாப்பே: கோல்டன் பூட்சுக்கு போட்டா போட்டி… யாருக்கு வாய்ப்பு அதிகம்?
தமிழ் தலைவாஸ்:
ரைடர்கள்: அஜிங்க்யா அசோக் பவார், சச்சின், ஹிமான்ஷு நர்வால், ஹிமான்சு சிங், நரேந்தர்.
டிஃபெண்டர்கள்: அங்கித், எம்.அபிஷேக், ஆஷிஷ், எம்.டி. ஆரிப் ரப்பானி, ஹிமான்ஷு, மோஹித், சாஹில் குலியா, அர்பித் சரோஹா.
ஆல்-ரவுண்டர்கள்: விஸ்வநாத் வி, தனுஷன் லக்ஷ்மமோஹா, கே அபிமன்யு
புனேரி பல்டன் vs தமிழ் தலைவாஸ்: உத்தேச 7 வீரர்கள் பட்டியல்:
புனேரி பால்டன்:
ஆகாஷ் ஷிண்டே, ஃபசல் அட்ராச்சலி, பங்கஜ் மோஹிதே, எஸ்மாயில் நபிபக்ஷ், ஆதித்யா ஷிண்டே, அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த்.
இதையும் படியுங்கள்: ஸ்டம்ப்பில் பந்து பட்டும் அவுட் இல்லை… ஸ்ரேயாசுக்கு என்னா அதிஷ்டமுன்னு பாருங்க – வீடியோ!
தமிழ் தலைவாஸ்:
நரேந்தர் ஹோஷியார், அஜிங்க்யா பவார், மோஹித், ஹிமான்ஷு, எம். அபிஷேக், அர்பித் சரோஹா, ஆஷிஷ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil