இப்படி ஒரு அம்பயரைத் தான் கிரிக்கெட் உலகம் தேடுகிறது - அஸ்வின் வெளியிட்ட வீடியோ

மூன்றாம் அம்பயர் இல்லாத குறையை இந்த குட்டிப்பையன் எப்படி தீர்க்கிறான் பாருங்கள்

R Ashwin shares ‘high-end technology’ used by the third umpire in gully cricket : கொரோனா வைரஸ் காலத்தில், மைதானத்தில் இல்லையென்றாலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன்.

நம்முடைய வாழ்வில் ஒரு முறையாவது தெருவில் கிரிக்கெட் விளையாடி இருப்போம். அடிக்கின்ற அடியில் பந்து போய் பக்கத்து வீட்டு ஜன்னலையெல்லாம் நிச்சயமாக பதம் பாத்திருக்கும். வீட்டுக்கு தெண்டம் இழுத்துவிட்டதற்காக அம்மாவிடமும் செமத்தையாக வாங்கியிருப்போம். அப்படி விளையாடவில்லை என்றால் “கல்லி கிரிக்கெட்டிற்கு” என்ன தான் மரியாதை.

மேலும் படிக்க : ஒரே ஒரு மாணவிக்காக இயக்கப்பட்ட படகு ! கேரள அரசுக்கு குவியும் பாராட்டுகள்

ஆனாலும் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும், நம்மள தேவையே இல்லாம அம்பேயர் அவுட் ஆக்கிவிட்டால். அதிலும் மைதானத்தில் இருப்பது போல் மூன்றாம் அம்பேயர் எல்லாம் இல்லை. ஆனா இந்த வீடியோவ பாருங்க. உங்களுக்கு எல்லாம் புரியும்.

இந்த டிக்டாக் வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அஸ்வின். மூன்றாம் அம்பயர் இல்லாத குறையை இந்த குட்டிப்பையன் எப்படி தீர்க்கிறான் பாருங்கள். சிரித்து சிரித்து வயிறே வெடித்துவிடும் போல் இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close