Advertisment

பெங்களூருவை வீழ்த்திய கொல்கத்தா; 2வது குவாலிஃபைர் சுற்றுக்கு முன்னேறியது!

RCB vs KKR Live score and live updates in tamil: ஒருங்கிணைந்த ஆட்டத்தின் மூலம் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ள கொல்கத்தா அணி 2வது குவாலிஃபைர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது

author-image
WebDesk
Oct 11, 2021 16:42 IST
RCB vs KKR Live match in tamil: IPL 2021 Eliminator, RCB vs KKR Live Streaming and match Highlights tamil

 IPL 2021 Eliminator, RCB vs KKR match highlights in tamil: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று திங்கள்கிழமை நடந்த எலிமினேட்டர் சுற்றில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். எனவே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக தேவதூத் படிக்கல் - கேப்டன் விராட் கோலி ஜோடி களமிறங்கினர்.

Advertisment

அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயற்சித்த இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டிய படிக்கல் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை தொடர்ந்திருந்த கேப்டன் கோலி 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து வந்த பெங்களூரு அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஸ்ரீகர் பாரத் 9 ரன்னிலும், க்ளென் மேக்ஸ்வெல் 15 ரன்னிலும், ஏபி டிவில்லியர்ஸ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் ஆளித்தனர்.

பின்னர் வந்த வீரர்களும் பெரிதும் சோபிக்காமல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த பெங்களூரு அணி 137 ரன்கள் சேர்த்தது. எனவே கொல்கத்தா அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா அணியில் சுழலில் மிரட்டிய சுனில் நரேன் 4 விக்கெட்டுகளையும், துல்லியமான வேகத்தில் வீசிய லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

தொடர்ந்து 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. எனினும், 4 பவுண்டரிகளை ஓடவிட்ட தொடக்க வீரர் சுப்மான் கில் 29 சேர்த்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் வந்த ராகுல் திரிபாதி 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானம் காட்டிய தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 1 சிக்சருடன் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்பை சந்தித்து இருந்தாலும் அந்த அணியின் சுனில் நரைன் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அவருடன் மறுமுனையில் இருந்த நிதிஷ் ராணா 1 சிக்ஸர் 1 பவுண்டரி விளாசி நரைனுக்கு கைகொடுத்தார். இந்த ஜோடியில் நிதிஷ் ராணா 23 ரன்களுடனும், சுனில் நரைன் 26 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி அடித்து 10 ரன்னில் அவுட் ஆனார். இந்த தருணத்தில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் இயோன் மோர்கன் (5) - ஷாகிப் அல் ஹசன் (9) ஜோடி அணியை கரை சேர்த்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

ஒருங்கிணைந்த ஆட்டத்தின் மூலம் எலிமினேட்டர் சுற்றில் வெற்றியை பதிவு செய்துள்ள கொல்கத்தா அணி 2வது குவாலிஃபைர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நாளை மறுநாள் புதன் கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதலாவது குவாலிஃபைர் சுற்றில் வெளியேறிய டெல்லி அணியை அந்த அணி எதிர்கொள்கிறது.

பந்துவீச்சில் கொல்கத்தாவை மடக்க தவறிய பெங்களூரு அணி தோல்வியை தழுவி எலிமினேட்டர் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. கேப்டனாக கடைசி ஐபிஎல் தொடரில் களமாடிய விராட் கோலிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நடப்பு சீசனில் அந்த அணியின் சார்பில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை வசப்படுத்தியுள்ளார். மேலும் அவர் இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் வெய்ன் பிராவோவின் (2013-ம் ஆண்டில் 32 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 23:15 (IST) 11 Oct 2021
  பெங்களூருவை வீழ்த்திய கொல்கத்தா; 2வது குவாலிஃபைர் சுற்றுக்கு முன்னேறியது!

  பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய கொல்கத்தா அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்பை சந்தித்து இருந்தாலும் கடைசி ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ; 2வது குவாலிஃபைர் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா அணி. • 22:56 (IST) 11 Oct 2021
  தினேஷ் கார்த்திக் அவுட்!

  138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணியில் 1 பவுண்டரியை விரட்டிய தினேஷ் கார்த்திக் 10 ரன்னில் அவுட் ஆனார். • 22:52 (IST) 11 Oct 2021
  சுனில் நரைன் அவுட்!

  பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்காக அதிரடியாக ரன் சேர்த்து வந்த சுனில் நரைன் 15 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு 26 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். • 22:41 (IST) 11 Oct 2021
  15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி!

  பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் 138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் சேர்துள்ளது. • 22:35 (IST) 11 Oct 2021
  நிதிஷ் ராணா அவுட்!

  138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு வலுவான ஸ்கோரை சேர்க்க முயன்ற நிதிஷ் ராணா 23 ரன்கள் சேர்த்து நிலையில் ஆட்டமிழந்தார். • 22:25 (IST) 11 Oct 2021
  பிராவோவின் சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல்!

  நடப்பு சீசனில் பெங்களூரு அணியில் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் இன்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான சென்னை வீரர் வெய்ன் பிராவோவின் (2013-ம் ஆண்டில் 32 விக்கெட்) சாதனையை சமன் செய்தார் ஹர்ஷல் படேல். • 22:19 (IST) 11 Oct 2021
  வெங்கடேஷ் ஐயர் அவுட்!

  138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்ஷல் படேல் வேகத்தில் சிக்கி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். • 22:01 (IST) 11 Oct 2021
  திரிபாதி அவுட்!

  138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி 6 ரன்னில் lbw முறையில் அவுட் ஆனார். • 21:57 (IST) 11 Oct 2021
  கொல்கத்தாவுக்கு நல்ல தொடக்கம்; சுப்மான் கில் அவுட்!

  138 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் - வெங்கடேஷ் ஐயர் ஜோடி களமிறங்கியுள்ளது.

  அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் 4 பவுண்டரிகளை விரட்டிய சுப்மான் கில் 29 ரன்களுடன் அவுட் ஆனார்.

  பவர் பிளே முடிவில் 1 விக்கெட் இழந்துள்ள கொல்கத்தா அணி 48 ரன்கள் சேர்துள்ளது. • 21:15 (IST) 11 Oct 2021
  பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 139 ரன்கள் இலக்கு!

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை சேர்த்துள்ளது. எனவே கொல்கத்தா அணிக்கு ரன்கள் 139 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  கொல்கத்தா அணியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ரன் ரேட் உயர்வதை தடுத்த சுனில் நரைன் 4 விக்கெட்டுகளையும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். • 20:47 (IST) 11 Oct 2021
  அடுத்தடுத்து விக்கெட் இழப்பு; நிதான ஆட்டத்தில் பெங்களூரு அணி!

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்துள்ளது. அந்த அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் சேர்த்துள்ளது. • 20:31 (IST) 11 Oct 2021
  12 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி... விராட்கோலி அவுட்

  கொல்கத்தா அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் பெங்களூர் அணி 12.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 39 ரன்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். மேக்ஸ்வெல் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். • 20:28 (IST) 11 Oct 2021
  12 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி... விராட்கோலி அவுட்

  கொல்கத்தா அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் பெங்களூர் அணி 12.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 39 ரன்களில் சுனில் நரைன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். மேக்ஸ்வெல் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். • 20:17 (IST) 11 Oct 2021
  கே.எஸ்.பரத் அவுட்

  எலிமினேட்டர் சுற்றில் பேட்டிங் செய்து வரும் பெங்களூர் அணி சற்றுமுன்வரை 9.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்துள்ளது. கே.எஸ்.பரத் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். • 20:00 (IST) 11 Oct 2021
  பெங்களூர் நிதான ஆட்டம்

  கொல்கத்தா அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் பெங்களூர் அணி முதல் 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் குவித்துள்ளது. • 19:56 (IST) 11 Oct 2021
  படிக்கல் அவுட்

  கொல்கத்தா அணிக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் பெங்களூர் அணி 5.1 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்துள்ள நிலையில், தொடக்க ஆட்டகாரர் படிக்கல் 18 பந்துகளில் 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் • 19:39 (IST) 11 Oct 2021
  ஆர்சிபி 2 ஓவர்களில் 17 ரன்கள்

  ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் கோல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி வரும் பெஙகளூர் அணி 2 ஓவர்கள் முடிவில் வி்க்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்துள்ளது. • 19:12 (IST) 11 Oct 2021
  இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பிவருமாறு!

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - விளையாடும் XI:

  சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விளையாடும் XI:

  விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் • 19:11 (IST) 11 Oct 2021
  கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு!

  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் இன்று இரவு 7:30 மணிக்கும் தொடங்கும் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  தற்போது டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. • 19:02 (IST) 11 Oct 2021
  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் இன்று திங்கட்கிழமை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. • 18:55 (IST) 11 Oct 2021
  கோப்பையை உச்சிமுகர்வாரா கேப்டன் கோலி?

  கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஒரு ஐ.பி.எல். கோப்பையை கூட வென்றதில்லை. அந்த கனவு நனவாக இன்னும் 3 வெற்றி தேவை. ஆனால் முதல் தடையை கடப்பதே கடும் சவாலாக இருக்கப்போகிறது. • 18:54 (IST) 11 Oct 2021
  கோப்பையை உச்சிமுகர்வாரா கேப்டன் கோலி?

  கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஒரு ஐ.பி.எல். கோப்பையை கூட வென்றதில்லை. அந்த கனவு நனவாக இன்னும் 3 வெற்றி தேவை. ஆனால் முதல் தடையை கடப்பதே கடும் சவாலாக இருக்கப்போகிறது. • 18:53 (IST) 11 Oct 2021
  கண்கலங்கிய சிறுவர்கள்… சர்ஃபரைஸ் கொடுத்த தோனி… நெகிழும் ரசிகர்கள்!

  கேப்டன் தோனி தனது ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்தபோது ஆனந்த கண்ணீர் வடித்த குட்டீஸ் ரசிகர்களுக்கு மேட்ச் பந்தை கிஃப்ட் செய்து சர்ஃபரைஸ் கொடுத்துள்ளார்.

  https://tamil.indianexpress.com/sports/ipl-tamil-news-ms-dhoni-gifts-signed-ball-to-young-csk-fans-tamil-news/ • 18:50 (IST) 11 Oct 2021
  பிராவோவின் சாதனையை முறியடிப்பாரா ஹர்ஷல் படேல்?

  நடப்பு சீசனில் பெங்களூரு அணியில் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் இன்றைய ஆட்டத்தில் இன்னும் 3 விக்கெட் எடுத்தால், ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான சென்னை வீரர் வெய்ன் பிராவோவின் (2013-ம் ஆண்டில் 32 விக்கெட்) சாதனையை முறியடித்து விடுவார். • 18:49 (IST) 11 Oct 2021
  2வது குவாலிஃபைர் சுற்றுக்கு முன்னேற போவது யார்?

  இன்று திங்கட்கிழமை நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது குவாலிஃபைர் சுற்றில் மோதும். • 18:47 (IST) 11 Oct 2021
  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். • 18:47 (IST) 11 Oct 2021
  இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு!

  பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், கே.எஸ்.பரத், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டேன் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

  கொல்கத்தா: சுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் (கேப்டன்), ஷகிப் அல்-ஹசன் அல்லது ரஸ்செல், சுனில் நரின், லோக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி. • 18:46 (IST) 11 Oct 2021
  இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு!

  பெங்களூரு: விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், கே.எஸ்.பரத், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டேன் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

  கொல்கத்தா: சுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன் (கேப்டன்), ஷகிப் அல்-ஹசன் அல்லது ரஸ்செல், சுனில் நரின், லோக்கி பெர்குசன், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி. • 18:43 (IST) 11 Oct 2021
  சார்ஜா மைதானம் எப்படி?

  பெங்களூரு - கொல்கத்தா அணிகள் லீக்கில் சந்தித்த 2 ஆட்டங்களில் ஒன்றில் 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவும், மற்றொன்றில் 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன. இதில் பெங்களூரு அணி வெறும் 92 ரன்னில் சுருண்டது குறிப்பிடத்தக்கது.

  போட்டி நடக்கும் சார்ஜா, மந்தமான வேகம் குறைந்த ஆடுகளமாகும். இங்கு ரன் சேர்ப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப விளையாடுவது முக்கியம். நடப்பு சீசனில் குறைவான ஸ்கோர் இதே சார்ஜா மைதானத்தில் தான் (ராஜஸ்தான் 85 ரன்) பதிவாகியிருக்கிறது.#Cricket #Ipl 2021 Live #Sports #Kolkata #Royal Challengers Bangalore #Ipl Live Score #Ipl News #Ipl Cricket #Live Updates #Live Cricket Score #Rcb Vs Kkr #Ipl #Ipl 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment