Advertisment

தோனியுடன் பேட் செய்வதே எனக்கு ஈஸி - சவுத்பா பண்ட்

உங்கள் ஷாட்ஸ்களுக்காக திட்டமிடுவார். நீங்கள் அதைப் பின்பற்றினால் மட்டும் போதும்.. நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் எம்.எஸ் தோனி

MS Dhoni and Rishabh Pant

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனியாக வலம் வர அனைத்து வளமும் கொண்ட வீரர் ரிஷப் பண்ட். ஆனால், பிரச்சனை என்னவெனில் இவரது Inconsistency. ஒருநாள், டி20, டெஸ்ட் என்று இவருக்கென நிறைய வாய்ப்புகளை பிசிசிஐ வழங்கியுள்ளது, வழங்கியும் வருகிறது. ஆனால், இவரது பேட் காட்டும் வேகத்தில் பாதி கூட கன்சிஸ்டன்சியில் இல்லை.

Advertisment

இதனால், இந்தா, அந்தா வீரராக அணியில் நீடிக்கிறார் பண்ட்.

இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஆன்லைனில் உரையாடிய ரிஷப், தோனியுடன் இணைந்து பேட்டிங் செய்வது தான் தனக்கு மிகவும் எளிதான ஒன்று என்று கூறியுள்ளார்.

சிகரெட், சீக்ரெட், வேர்ல்டு சாம்பியன் – வெளியான பென் ஸ்டோக்ஸ் ரகசியம்

இதுகுறித்து அவர், ”தோனியுடன் பேட் செய்ய எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அவர் எனக்கு மிகவும் பிடித்த பேட்டிங்பார்ட்னர், ஏனென்றால் அவர் மறுமுனையில் இருக்கும்போது பேட்டிங் எளிதாகிறது. அவர் உங்களுக்காக, உங்கள் ஷாட்ஸ்களுக்காக திட்டமிடுவார். நீங்கள் அதைப் பின்பற்றினால் மட்டும் போதும்.. நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. குறிப்பாக ரன்-சேஸ்ஸின் போது அவரது மூளை செயல்படும் விதம் ஆச்சரியமாக இருக்கும்" என்றார் பண்ட் .

அதுமட்டுமின்றி அணியின் சீனியர் வீரர்கள் குறித்து பேசிய ரிஷப், "விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோருடன் பேட்டிங் செய்வதை நான் மிகவும் ரசிக்கிறேன். சீனியர்களுடன் பேட் செய்வது முற்றிலும் வித்தியாசமான அனுபவம். அவர்களுடன் மறுமுனையில் இருப்பதால் அவர்களின் மைண்ட் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள்உணர முடியும். ஐபிஎல்-ல் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயருடன் விளையாடியதும் மறக்க முடியாதது" என்றார்.

ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சொதப்புவது மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் பெரிதாக தன்னை நிரூபிக்கவில்லை. இன்னமும், அவர் கீப்பிங் பணியில் தடுமாறித் தான் கொண்டிருக்கிறார். ஆனால், அதிரடியாக ஆடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அடுத்த தோனி எனும் அந்தஸத்தில் இன்னும் பார்க்கப்படுகிறார்.

ஆனால், அந்த இடத்திற்கு லோகேஷ் ராகுல் சப்தம் போடாமல் வந்துக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறியாதது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Mahendra Singh Dhoni Rishabh Pant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment