தூக்கத்தில் அசந்த பண்ட்… தூக்கி எறியப்பட்ட கார்… பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Rishabh Pant accident: CCTV footage VIRAL video Tamil News
WATCH video: Rishabh Pant’s Car Crashes Into Divider, CCTV Footage Goes VIRAL Tamil News

Rishabh Pant Car Accident, CCTV captures Mercedes car crashing into divider Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும், தனது தாயாரை ஆச்சரியப்படுத்தவும், இன்று டெல்லியிலிருந்து உத்தரகாண்டின் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-AMG GLE43 Coupe) கார் ஹரிதுவார் ரூர்க்கி நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலையில் இருந்த டிவைடரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

பண்ட் கார் ஓட்டும் போது தூக்க அசதியில் விழுந்ததாகவும், அதனால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் அவர் கூறினார். மேலும் அவர், காரில் தீ பற்றிக்கொண்ட நிலையில், தனது உயிரைக் காப்பாற்ற ஜன்னல்களில் ஒன்றை உடைக்க வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ‘நெற்றியில் வெட்டுக் காயம், முதுகில் சிராய்ப்பு’: பண்ட் கார் விபத்து குறித்து பி.சி.சி.ஐ அறிக்கை

இதன் பிறகு, பண்டை அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ரிஷப் பண்டிற்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், அதில் அவரது கார் டிவைடரில் அதிவேகமாக மோதியதைக் காட்டுகிறது.

இதையும் படியுங்கள்: ‘நெற்றியில் வெட்டுக் காயம், முதுகில் சிராய்ப்பு’: பண்ட் கார் விபத்து குறித்து பி.சி.சி.ஐ அறிக்கை

மேலும், ரிஷப் பண்ட்டின் கார் தீப்பிழம்பால் சூழந்த வீடியோ காட்சிகளும், பண்டை அங்கிருந்த மக்கள் ஓடி வந்து தூக்கும் மற்றும் அவருக்கு துணி கொடுத்து உதவும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Rishabh pant accident cctv footage viral video tamil news

Exit mobile version