இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா புதன்கிழமை அறிவித்தார். “எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகத்தையும் பிரதிநிதித்துவபப்படுத்தியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். எவ்வாறாயினும், அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் நன்றி” என்று ராபின் உத்தப்பா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்; பி.சி.சி.ஐ விதிகளை திருத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி
"நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறது, மேலும் எனது நாட்டையும் கர்நாடகா மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியது மிகப்பெரிய கவுரவம், ஏற்ற தாழ்வுகளின் அற்புதமான பயணம்; நிறைவாக, பலனளித்து, சுவாரஸ்யமாக இருந்து ஒரு மனிதனாக என்னை வளர அனுமதித்த ஒன்று. எவ்வாறாயினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், நன்றியுள்ள இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது இளம் குடும்பத்துடன் கணிசமான நேரத்தை செலவிடும் அதே வேளையில், வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை பட்டியலிட ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று ராபின் உத்தப்பா ஒரு குறிப்பு எழுதி, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ராபின் உத்தப்பா தனது முன்னாள் ஐ.பி.எல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் தற்போதைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த சீசனின் ஐ.பி.எல்.,லில், உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 230 ரன்களை எடுத்தார், அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 88 ஆகும். இருப்பினும் சென்னை, பிளே-ஆஃப் கட்டங்களுக்கு தகுதி பெறத் தவறியது.
கவுகாத்தியில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான உத்தப்பா, இந்தியாவுக்காக 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 934 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 13 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி, 249 ரன்கள் எடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil