Advertisment

வீடியோ: 'ஹக்' கேட்ட பாக். ரசிகர்; வேலி தாண்டிச் சென்று நிறைவேற்றிய ரோகித் சர்மா!

IND Captain Rohit Sharma meeting Pakistan fans video goes viral in internet Tamil News: இந்திய கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியின் போது, பாகிஸ்தான் ரசிகரை ஒரு சகோதரனைப் போல கட்டிப்பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rohit jumped the fence and fulfils WISH of PAKISTAN fan, video goes viral

IND vs PAK: Rohit Sharma meets Pakistan fans Tamil News

Asia Cup 2022 Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கி நடக்கிறது. டி-20 ஆட்டங்களாக அரங்கேறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் களமாடுகின்றன. இந்த ஆறு அணிகளும் தற்போது இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

Advertisment

இதில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

publive-image

இதையும் படியுங்கள்: இந்த ஓவர்களில் அதிரடி அவசியம்… ஆசியக் கோப்பையில் இந்தியா வியூகம் இதுதான்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்

இந்நிலையில், ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் நாளை துபாயில் நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ்.லக்ஷ்மான் பொறுப்பேற்றுள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி, இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

publive-image

இதேபோல், பாகிஸ்தான் அணியினரும் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் அதே மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களை சந்தித்து பேசியது மற்றும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ள பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியை நலம் விசாரித்த வீடியோ இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியது.

publive-image

இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் பாகிஸ்தான் ரசிகரை வாழ்த்தியது மற்றும் பயிற்சியின் போது அவரை ஒரு சகோதரனைப் போல கட்டிப்பிடித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: பாகிஸ்தான் ஸ்டார் வீரரை வரிசையாக சந்தித்த இந்திய வீரர்கள்; பேசியது என்ன? சுவாரஸ்ய வீடியோ

ஆசிய கோப்பைக்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதைக் காண ரசிகர்கள் நல்ல எண்ணிக்கையில் மைதானத்தில் குவிந்துள்ளனர். மேலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இரு நாட்டு வீரர்களும் அவர்களுடன் செல்ஃபிகள் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை, இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது பயிற்சியை முடித்துவிட்டு மைதானத்தில் இருந்து வெளியேறிய போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணக்க புகைப்படங்களையும் செல்ஃபியையும் அவர்களுடன் எடுத்துக்கொண்டார். இதில் ஒரு பாகிஸ்தான் ரசிகர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு, தன்னை கட்டிப்பிடிக்குமாறு வேண்டிக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: கருத்து வேற்றுமை: நீடா அம்பானி, கோலி, கங்குலி மீதான புகார்களை திரும்பப் பெற்ற சஞ்சீவ் குப்தா

இருவருக்கும் இடையில் வேலி இருந்தாலும், கேப்டன் ரோகித் அவரது விருப்பத்தை நிறைவேற்றி, அவரை ஒரு சகோதரனைப் போல கட்டிப்பிடித்தார். இந்த வீடியோ தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இனைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், துபாயில் இன்று தொடங்கும், முதல் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடக்கிறது.

இதையும் படியுங்கள்: Ind vs Pak: எந்தெந்த வீரர்கள் இடையே மோதல் அனல் பறக்கும்?

இதையும் படியுங்கள்: களத்தில் எதிரிகள்… வெளியில் நண்பர்கள்… வைரலாகும் கோலி – பாபர் அசாம் வீடியோ!

இதையும் படியுங்கள்: பாபர் அசாம் vs விராட் கோலி; யார் பெஸ்ட்? அக்ரம் எவ்ளோ நேர்மையா சொல்றார் பாருங்க!

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cricket Rohit Sharma Sports Indian Cricket Dubai India Vs Pakistan Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment