ராஜஸ்தானை பந்தாடிய மும்பை; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி!

Rajasthan Royals (RR) vs Mumbai Indians (MI) Live Score, live updates and match highlights in tamil: 91 ரன்கள் கொண்ட எளிய இலக்கை துரத்திய மும்பை அணி அதிரடியாக ரன் குவித்து ஆட்டத்தின் 8வது ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

RR vs MI Live Score in tamil: RR vs MI Live Score, match highlights in tamil:

IPL 2021, RR vs MI match highlights in tamil: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய 51வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட எவின் லூயிஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களுடனும், எவின் லூயிஸ் 24 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த சிவம் துபே 3 ரன்னுடனும், க்ளென் பிலிப்ஸ் 4 ரன்னுடனும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர்.

மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சிற்கு சிறிது நேரம் களத்தில் தாக்குப்பிடித்த டேவிட் மில்லர் (15), ராகுல் தேவாடியா (12) ஜோடியும் ஆட்டமிழந்து வெளியேறியது. இதனால், ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களை சேர்த்தது. இவர்களது விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய அறிமுக வீரர்கள் ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். எனவே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 91 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

பந்து வீச்சில் தொடர் தாக்குதலை தொடுத்து ராஜஸ்தான் அணியை கதிகலங்க செய்த மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் நாதன் கூல்டர்-நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

தொடர்ந்து 91 ரன்கள் கொண்ட எளிய இலக்கை துரத்த களமிறங்கிய மும்பை அணி அதிரடியாக ரன் குவித்து ஆட்டத்தின் 8வது ஓவரிலே வெற்றியை ருசித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் இஷான் கிஷன் 50 ரன்கள் சேர்த்தார் (25 பந்துகளில், 3 சிக்ஸர், 5 பவுண்டரிகள் உட்பட). அணியின் வெற்றியை 10 ஓவர்களுக்குள்ளேயே முடிவு செய்ய அதிரடியாக விளையாடி கேப்டன் ரோகித் சர்மா 2 சிக்ஸர் 1 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 3 பவுண்டரிகளை விரட்டிய சூர்யகுமார் யாதவ் 13 ரன்னில் அவுட் ஆனார்.

வாழ்வா சாவா? ஆட்டத்தில் மிரட்டலான வெற்றியை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகள் மற்றும் – 0.48 நெட் ரன்ரேட்டுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், அந்த அணி பிளே- ஆப் சுற்றுக்கான ரேஸிலும் நீடிக்கிறது.

மும்பை அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் (வருகிற 8ம் தேதி வெள்ளிக்கிழமை) சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் அந்த அணி வெல்லும் பட்சத்தில் பிளே -ஆப் சுற்றுக்கு தகுதி பெற பிரகாசமான வாய்ப்பை பெறும். எனினும், பட்டியலில் 12 புள்ளிகள் மற்றும் +0.294 நெட் ரன்ரேட்டுடன் கொல்கத்தா அணி 4வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் (வருகிற 7ம் தேதி வியாழக்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் கொல்கத்தா அணி வெற்றியை ருசித்தால் பிளே -ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இல்லையென்றால் மும்பை அணி பிளே -ஆப்க்கு நுழைந்து விடும்.

தற்போது மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே – ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Indian Premier League, 2021Sharjah Cricket Stadium, Sharjah   28 January 2022

Rajasthan Royals 90/9 (20.0)

vs

Mumbai Indians   94/2 (8.2)

Match Ended ( Day – Match 51 ) Mumbai Indians beat Rajasthan Royals by 8 wickets

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
10:29 (IST) 5 Oct 2021
ராஜஸ்தானை வெளுத்து வாங்கிய மும்பை; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி!

ராஜாதான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய மும்பை அணி 8வது ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது

10:20 (IST) 5 Oct 2021
வெற்றியை நோக்கி மும்பை அணி!

ராஜாதான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் மும்பை அணியின் வெற்றிக்கு 72 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவை.

10:19 (IST) 5 Oct 2021
பவர் பிளே முடிவில் மும்பை அணி!

ராஜாதான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் மும்பை அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டை இழந்து 56 ரன்களை சேர்த்துள்ளது.

10:02 (IST) 5 Oct 2021
சூர்யகுமார் யாதவ் அவுட்!

ராஜாதான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் மும்பை அணியில் 3 பவுண்டரிகளை விரட்டிய சூர்யகுமார் யாதவ் 13 ரன்னில் அவுட் ஆகினார்.

9:51 (IST) 5 Oct 2021
ரோகித் சர்மா அவுட்!

ராஜாதான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 91 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் மும்பை அணியில் 2 சிக்ஸர் 1 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சேர்த்த கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

9:24 (IST) 5 Oct 2021
பந்து வீச்சில் மிரட்டிய மும்பை அணிக்கு 91 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடர் விக்கெட் சரிவை சந்தித்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. இதனால், ஆட்டத்தின் தொடக்கம் முதலே பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்து மிரட்டிவந்த மும்பை அணி 91 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

9:16 (IST) 5 Oct 2021
100 ரன்களை தாண்ட தடுமாறும் ராஜஸ்தான் அணி!

மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் சேர்த்துள்ளது.

8:15 (IST) 5 Oct 2021
சஞ்சு சாம்சன் அவுட்!

மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணியில் முதல் விக்கெட்டுக்கு பிறகு களம் கண்ட ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 3 ரன்னில் அவுட் ஆகி நடையை கட்டினார்.

8:12 (IST) 5 Oct 2021
பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி!

மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டை இழந்து 41 ரன்களை சேர்த்துள்ளது.

8:05 (IST) 5 Oct 2021
யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவுட்!

மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் 3 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

7:41 (IST) 5 Oct 2021
ஆட்டம் இனிதே ஆரம்பம்!

மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக எவின் லூயிஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கியுள்ளது.

7:18 (IST) 5 Oct 2021
ராஜஸ்தான் – மும்பை அணிகளில் 2 மாற்றம்!

மார்கண்டேயா மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் குல்தீப் யாதவ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்குகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் டி காக் மற்றும் க்ருனால் பாண்டியாவுக்கு பதிலாக இஷான் மற்றும் நீஷம் ஆகிய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

7:10 (IST) 5 Oct 2021
இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-

ராஜஸ்தான் ராயல்ஸ் (விளையாடும் XI):

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, ஸ்ரேயாஸ் கோபால், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா

மும்பை இந்தியன்ஸ் (விளையாடும் லெவன்):

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, கீரான் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், நாதன் கூல்டர்-நைல், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

7:07 (IST) 5 Oct 2021
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு!

மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

7:02 (IST) 5 Oct 2021
“ஆட்டத்தை முடித்து வைக்கவே எனக்கு சம்பளம் தருகிறார்கள்” – டெல்லி வீரர் ஹெட்மையர்!
போட்டியை கடைசி வரை நின்று வெற்றிகரமாக முடித்து வைக்க தான் தனக்கு சம்பளம் தருகிறார்கள் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர் ஷிம்ரோன் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்.https://tamil.indianexpress.com/sports/shimron-hetmyer-tamil-news-shimron-hetmyer-ipl-interview-tamil-351426/
6:58 (IST) 5 Oct 2021
ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் வீரர் சாம் கரண் விலகல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சாம் கரண் காயம் காரணமாக விலகியதாக சென்னை அணியின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

6:37 (IST) 5 Oct 2021
பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அந்த அணி எது?

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் சன்ரைசர்ஸ் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. மீதமுள்ள ஒரே ஒரு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்துக்கான போட்டியில் கொல்கத்தா நைட் டைரர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

https://tamil.indianexpress.com/sports/ipl-2021-playoffs-tamil-news-kkr-rr-mi-and-pbks-in-ipl-playoff-race-350961/

6:35 (IST) 5 Oct 2021
நேருக்கு நேர்!

ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை 12 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 11 ஆட்டத்திலும் வென்றுள்ளன.

6:33 (IST) 5 Oct 2021
சார்ஜா மைதானம் எப்படி?

இன்றைய ஆட்டம் நடைபெறும் சார்ஜா மைதானத்தின் ஆடுகளம் சற்று மெதுவான (ஸ்லோ) தன்மை கொண்டதாகும். இங்கு 150-160 ரன்களே சவாலான ஸ்கோராக இருக்கும். ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணித்து செயல்படும் அணியின் கையே ஓங்க வாய்ப்புள்ளது. இதில் எந்த அணியின் கை ஓங்குகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

6:31 (IST) 5 Oct 2021
மும்பை அணி வெற்றி!

ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

6:26 (IST) 5 Oct 2021
இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, நாதன் கவுல்டர் நிலே, ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

இவின் லீவிஸ், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிவம் துபே, கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ஆகாஷ்சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகாரியா, முஸ்தாபிஜூர் ரகுமான்.

6:25 (IST) 5 Oct 2021
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு 7:30 மணிக்கும் சார்ஜாவில் நடைபெறும் 51வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மல்லுக்கட்டுகிறது.

Web Title: Rr vs mi live score in tamil rr vs mi live score match highlights in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com