வங்கதேச கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சபீர் ரஹ்மான் பற்றி ரசிகர்கள் நன்கு அறிவர். இவர் ஒரு மைக்ரோ டி வில்லியர்ஸ் எனலாம். அவர் சமீபத்தில் வீடியோ கால் மூலம் அளித்த பேட்டி ஒன்றில் தோனி குறித்து சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக, 2016ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப் பெற்றது. அப்போட்டியில் 15 பந்துகளில் 26 ரன்களுடன் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த சபீர் ரஹ்மான், தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் சபீர் அவுட்டானது வங்கதேச வீழ்ச்சிக்கு வித்திட்டது.
எங்க இருந்தாலும் ட்ரெய்னிங் தான் முக்கியம் - பரபரக்க ஓடும் விராட் கோலி!
இதுகுறித்து பேசியுள்ள சபீர் ரஹ்மான், "பெங்களூருவில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி என்னை ஸ்டெம்பிங் செய்துவிட்டார். இதை நான் மறக்கவேயில்லை. கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், அதே போன்று மீண்டும் ஒருமுறை என்னை ஸ்டெம்பிங் செய்யும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்தது.
ஆனால், இம்முறை அவரது வேகத்தை முந்தி, நான் கிரீஸுக்குள் காலை வைத்துவிட்டேன். அப்போது நான் அவரிடம் 'இன்று அப்படி அவுட்டாகமாட்டேன்' என்று கூறினேன் என தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
சபீர் தோனியின் தீவிர ரசிகரும் கூட. தோனியின் சிக்ஸர்கள் ஷபீரின் பேவரைட்டும் கூட.
இதுகுறித்து பேசிய சபீர், "ஒருமுறை நான் தோனியிடம், உங்கள் பேட்டுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? நாங்கள் பந்துகளை விளாச தடுமாறிக் கொண்டிருக்கும் போது, நீங்கள் என்ன அடித்தாலும் அது ஏன் சிக்ஸருக்கு போகிறது? என்று கேட்டேன். அதற்கு அவர், 'அனைத்தும் நமது தன்னம்பிக்கையில் உள்ளது' என்று என்னிடம் கூறினார்.
கொஞ்சம் கஷ்டம் தான்; ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்ல - வைரல் வீடியோ
மேலும், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது விளையாட அவருடைய பேட்டை கேட்டேன். அதற்கு தோனி, நான் பேட் தருகிறேன். ஆனால் அதை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பயன்படுத்தக் கூடாது, மற்ற அணிகளுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்" என்று கூறிவிட்டார்" என சபீர் தோனி குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.