Sabre Fencer Bhavani Devi name nominated for Arjuna Award
Sabre Fencer Bhavani Devi name nominated for Arjuna Award : இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அர்ஜூனா விருதுக்கான பரிந்துரைகளை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் ஜூன் 3ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் வாள்சண்டை வீராங்கனையான பவானி தேவியின் பெயர் தற்போது அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வரும் அவரின் பெயர் வாள்சண்டை கூட்டமைப்பு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற டூர்னோய் சேட்டிலைட் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளித் தங்கம் பெற்றதும், காமென்வெல்த் மற்றும் ஆசிய சாம்பியன் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றதும் இந்த பரிந்துரைக்கான காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து துப்பாக்கிச்சுடு வீராங்கனையான இளவேனில் வாளறிவன் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“