‘இன்னும் 4000 ரன் விளாசி இருப்போம்ல’ – சச்சின் கேள்விக்கு கங்குலியின் தாராள பதில்

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தாதா சவுரவ் கங்குலி இருவரும் சேர்ந்து மொத்தமாக 176 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜோடியாக ஒரு நாள் போட்டிகளில் 8,227 ரன்களை அடித்துள்ளனர். இந்த 176 போட்டிகளில் மொத்தமாக இருவரும் சேர்ந்து…

By: May 12, 2020, 6:56:07 PM

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தாதா சவுரவ் கங்குலி இருவரும் சேர்ந்து மொத்தமாக 176 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜோடியாக ஒரு நாள் போட்டிகளில் 8,227 ரன்களை அடித்துள்ளனர்.

இந்த 176 போட்டிகளில் மொத்தமாக இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் 26 முறையும், 50 ரன்களுக்கு மேல் 29 முறையும் அடித்துள்ளனர். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 258 ரன்களை அடித்துள்ளனர்.

வடியும் ரத்தம்; படையப்பா பிஜிஎம்; ரஜினிக்கே பிடிச்சிருக்கும் – வீ சல்யூட் வாட்சன் (வீடியோ)

இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த ஜோடி என்ற சாதனையை படைத்தது சச்சின் – கங்குலி ஜோடி. இவர்களை தவிற வேறு எந்த ஜோடியும் ஒரு நாள் போட்டிகளில் 6,000 ரன்களுக்கு மேல் கூட அடித்ததில்லை.

ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த ஜோடி

சச்சின், கங்குலி – 8227 ரன்கள்
ஜெயவர்தனே, சங்ககாரா – 5992 ரன்கள்
தில்சான், சங்ககாரா – 5475 ரன்கள்
அட்டபட்டு, ஜெயசூர்யா – 5462 ரன்கள்
கில்கிறிஸ்ட், ஹேடன் – 5409 ரன்கள்

சச்சின், கங்குலி இருவரும் சேர்ந்து 1997 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதன்மூலம் இந்த சாதனை பட்டியலில் 13 வருடங்களுக்கும் மேலாக முதலிடத்தை பிடித்துள்ளனர்.

இந்த விவரத்தை ஐசிசி வெளியிட, ஆர்வமான சச்சின், இதுகுறித்த தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவு செய்ததோடு மட்டுமின்றி, கங்குலியிடம் ஒரு கேள்வியையும் முன் வைத்தார்.


அதில், 30 யார்டு வட்டத்துக்கு வெளியே நான்கு பீல்டர்கள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இரண்டு புது பந்துகளில் நமக்கு பந்துவீசினால், நாம் இன்னும் எவ்வளவு ரன்கள் அடித்திருப்போம்? என்று கங்குலியிடம் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த தாதா, “இன்னும் 4000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் அடித்திருப்போம். அதுவும், ஒவ்வொரு போட்டியிலும் முதல் ஓவரில் கவர் டிரைவில் அடிக்கப்படும் பவுண்டரிகளாக இருந்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Sachin and ganguly partnership bcci icc odi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X