பரபரப்பான 2019 ஐபிஎல் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் கோப்பை வென்றதை எவரும் மறந்திருக்க முடியாது. ஆனால், அன்றைய தினம் சிஎஸ்கே வீரர் வாட்சன் ஆடிய விதத்தை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
சென்னை அணியின் வாட்சன் சிறப்பாக விளையாடி சென்னையை இறுதிக் கட்டம் வரை அழைத்துச் சென்றார். அதிரடியாக விளையாடிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய அவர் கடைசி ஓவரில் தான் ரன் அவுட் ஆனார்.
'அந்த குழந்தையே நான் தான்' - சச்சின் உட்பட பிரபலங்களின் அன்னையர் தின ஸ்பெஷல்
அப்போட்டியில், ரன் ஓடும் போது டைவ் அடித்ததால் வாட்சன் காலில் காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ரத்தம் வழிய ஆரம்பித்தது. மெக்லங்கன் வீசிய 9 ஆவது ஓவரில் தான் அவரது கால் பகுதி முழுவதும் ரத்தம் கசிந்துள்ளதை காண முடிந்தது. எதிரணி வீரர்கள், அம்பயர்கள், ரசிகர்கள் என அனைவரும் ஷாக்காக, வாட்சன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தனது அணியின் வெற்றிக்காக 12 ஓவர்கள் ரத்தம் சொட்டிய நிலையில் அடிபட்ட காலுடன் வாட்சன் விளையாடிய இந்த நிகழ்வு சென்னை அணி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் குறித்து வாட்சன் சமீபத்தில் பேசிய வீடியோவை, சூப்பர் ரஜினியின் படையப்பா தீம் மியூசிக்கோடு அட்டகாசமாக எடிட் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
டி20 உலகக் கோப்பைக்கு நோ.... ஐபிஎல்-லுக்கு எஸ்! ரசிகர்களின் நாடி தெரிந்த பிசிசிஐ
அந்த வீடியோவில் பேசிய வாட்சன், "காலில் காயம் ஏற்பட்டது குறித்த எந்த உணர்வும் எனக்கு இல்லை. அதனால் நான் தொடர்ந்து விளையாடினேன். ரத்தம் கசிந்தது பின்னர் தான் தெரிய வந்தது. ஆனால், ரத்தம் வழிவது எனது ஆட்டத்தை நிறுத்திவிடாது. பேட்டிங் செய்யும் போதே எனக்கு இது தெரிந்திருந்தாலும் நான் பின்வாங்கி இருக்கமாட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
12, 2020
மாப்ளைக்கு அவ்ளோ வெறி!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”