டி20 உலகக் கோப்பைக்கு நோ…. ஐபிஎல்-லுக்கு எஸ்! ரசிகர்களின் நாடி தெரிந்த பிசிசிஐ

புதன்கிழமை நடைபெற்ற ஒரு பி.சி.சி.ஐ டெலி கான்பிரன்ஸ் ஐ.பி.எல்லின் சாத்தியமான திட்டமிடல் பற்றி விவாதித்ததுடன், இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் குறித்தும் ஆலோசித்தது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படுவது குறித்து நிர்வாகிகள் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் பிற்பகுதி…

By: May 8, 2020, 4:53:03 PM

புதன்கிழமை நடைபெற்ற ஒரு பி.சி.சி.ஐ டெலி கான்பிரன்ஸ் ஐ.பி.எல்லின் சாத்தியமான திட்டமிடல் பற்றி விவாதித்ததுடன், இந்தியாவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் குறித்தும் ஆலோசித்தது.

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்படுவது குறித்து நிர்வாகிகள் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த ஆண்டின் பிற்பகுதி வரை இந்தியாவில் எந்தவொரு கிரிக்கெட்டும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று நிர்வாகிகள் ஒப்புக் கொண்டாலும், குறைந்தபட்சம் ஐ.பி.எல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவின் கோவிட் -19 [பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த சீசனின் ஐபிஎல் குறித்து சந்தேகமாகவே உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தாலும், திட்டமிட்டப்படி உலகக் கோப்பை டி20 நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆஸ்திரேலியா தனது எல்லைகளை ஆறு மாதங்களாக மூடியுள்ளது, ஐ.சி.சி உடன் இணைந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் (சி.ஏ) கூட மாற்று விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது.

டி 20 உலகக் கோப்பை போன்ற உலகளாவிய நிகழ்வை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்த முடியாது என்று ஐ.சி.சி உறுப்பினர்களில் பெரும்பாலோர் உடன்படுகிறார்கள் என்று அறியப்படுகிறது.

“வெற்று அரங்கத்தில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் (டி 20 தொடர்) நடக்கக்கூடும். ஆனால் உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய நிகழ்வு, அப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்று பிசிசிஐ செயல்பாட்டாளர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

“ஐபிஎல்லை இந்த சீசனில் நடத்த வாய்ப்பு இருந்தால், நாங்கள் அதற்காக முன்னெடுப்போம், ஆனால் தற்போது நாங்கள் அழைப்பு விடுக்கும் நிலையில் இல்லை,” என்று அவர் கூறினார்.

பிசிசிஐ-யைச் சார்ந்த மற்றொரு நபர் ஒருவர் எதிர்காலத்தை குறித்து எச்சரித்தார்.

“தற்போது நாம் பற்றியும் உறுதியாக பேச முடியாது. ஆனால், ஒரு விஷயம் உறுதி. வீரர்கள் மற்றும் நிர்வாகிகளின் பாதுகாப்பில் மிகவும் உறுதியாக உள்ளோம், எந்த முயற்சியும் எடுக்க மாட்டோம். டி 20 உலகக் கோப்பை குறித்து அவர்கள் (சி.ஏ மற்றும் ஐ.சி.சி) என்ன முடிவு செய்கிறார்கள் என்பதை நாங்கள் பார்ப்போம், அதன்படி செயல்படுவோம்” என்று அவர் கூறினார், பி.சி.சி.ஐ அதன் எதிர்கால நடவடிக்கை குறித்து அரசாங்கத்தின் பச்சைக் கொடிக்கு பிறகுதான் சிந்திக்கத் தொடங்கும் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

‘அந்த எலியை தூக்கி அப்படி உள்ள வை குமாரு’ – சாஹலை கலாய்த்த சேட்டை சிங் (வீடியோ)

இறுதியில் டி 20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டு, பிசிசிஐ அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐபிஎல் ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றால், வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பு ஒரு பிரச்சனையாக இருக்காது.

“ஐபிஎல்லில் விளையாட தங்கள் வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க, கிரிக்கெட் வாரியங்கள் அந்தந்த வீரர்களின் மொத்த ஒப்பந்த மதிப்பின் அடிப்படையில் தலா 10 சதவீதத்தைப் பெறுகின்றன. தற்போதைய (பொருளாதார) நிலைமையைப் பொறுத்தவரை, எல்லோரும் பி.சி.சி.ஐ உடன் நல்லுறவைப் பேண விரும்புகிறார்கள்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவுக்கு பதிலாக டி 20 உலகக் கோப்பையை இந்த ஆண்டு இந்தியா நடத்துகிறது என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:T20 world cup indian premier league 2020 bcci

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X