/tamil-ie/media/media_files/uploads/2018/07/food-5.jpg)
இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜனின் சிங்கின் பிறந்த நாள் இன்று. தமிழக மக்களால் தமிழ் புலவர் என்று செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் கடைசியில் சச்சினையும் தமிழில் பேச வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரான ஹர்பஜன் சிங் சேட்டைகளின் மன்னன் என்பது எலோருக்கும் தெரிந்த ஒன்று. ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிலிருந்து சென்னை அணிக்கு மாறிய நாளிலிருந்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலியே ட்வீட் செய்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.
சென்னை அணிக்கு வந்த பிறகு ஹர்பஜன் தமிழ் புலவராகவே மாறிவிட்டார் என்று க்தோனி உட்பட பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஹர்பஜனை செல்லமாக கலாய்த்து வந்தனர். குறிப்பாக தோனி கூட ஒரு மேடையில் பகிர்ந்திருந்தார். “ஹர்பஜனின் தமிழ் ரகசியத்தை கண்டும் நானே பலமுறை வியந்துள்ளேன். அந்த ரகசியத்தை மட்டும் என்னால் தெரிந்துக் கொள்ள முடியவில்லை” என்று கூறியிருந்தார்.
தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா.
சமீபத்தில் தந்தையர் தினத்தன்றும் ஹர்பஜன் ட்விட்டரில் தமிழில் உருக்கமாக வாழ்த்து கூறி பலரையும் நெகிழ வைத்திருந்தார். இந்நிலையில், இன்று(3.7.18) 38 ஆவது பிறந்த நாள் கொண்டாடும் ஹர்பஜன் சிங்கிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை காலை முதலே தெரிவித்து வருகின்றனர். ஹர்பஜனின் தமிழ் புலமைக்கு ஃபேனான சச்சின் டெண்டுல்காரும் அவருக்கு தமிழிலியே வாழ்த்து கூறி இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்???? pic.twitter.com/UYOiCQF4mO
— Sachin Tendulkar (@sachin_rt) 3 July 2018
சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, ஹர்பஜன். ஹவ் எ ப்ளாஸ்ட்' என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதை சமூகவலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.