மறக்க முடியாத ரசிகரை சந்தித்தமைக்கு – நன்றி டெண்டுல்கர் !

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டில் ஆலோசனை வழங்கிய தமிழக ரசிகர் ஒருவரை தேடிவருவதாகவும் அவரைக் கண்டுபிடிக்க அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By: Updated: December 17, 2019, 11:16:03 AM

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டில் ஆலோசனை வழங்கிய தமிழக ரசிகர் ஒருவரை தேடிவருவதாகவும் அவரைக் கண்டுபிடிக்க அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்த்தார். அந்த ரசிகர் தாஜ் கோரமண்டல் ஊழியர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

அதனைத்  தொடர்ந்து, கடந்த டிசம்பர் 15ம தேதி, தாஜ் கோரமண்டல் தனது ட்விட்டர், ” 19 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சென்னையில் தங்கியிருந்தபோது எங்கள் சக ஊழியருடன் உங்கள் மறக்கமுடியாத சந்திப்பைப் தற்போது பகிர்ந்தமைக்கு நன்றி திரு. டெண்டுல்கர்.  தாஜ்னஸ் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்திய எங்கள் ஊழியர்களை நினைத்து  நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் அவரைக் கண்டுபிடித்துள்ளோம், உங்கள் இருவரையும் ஒரு சந்திப்புக்கு இணைப்பதில் நாங்கள்  மகிழ்ச்சி அடைவோம்” என்று பதிவு செய்திருந்தது.

இதனையடுத்து, சச்சின் தனது ரசிகரை சந்தித்து பேசியுள்ளார். இருவருக்குமான உரையாடல் சிறப்பான தருணம் என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும், குருபிராசத் குறித்த முழு செய்தி தொகுப்பை, இங்கே வாசிக்கலாம்.

பின்னணி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் அதிகர் ரன் குவித்த வீரர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனைகளை படைத்துள்ளார். இந்த சாதனைகளை முறியடிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளர்.


அதில் “நான் முன்பு சென்னை வந்திருந்தபோது தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தேன். அப்போது நான் ஒரு காபி கேட்டேன். அங்கிருந்த வெய்ட்டர் ஒருவர் எனக்கு காபி கொடுத்தார். காபியை பெற்றுக்கொண்டு நான் அதைக் குடிக்கத் தொடங்கியபோது. அவர் என்னிடம் கிரிக்கெட் பற்றி என்னுடன் பேச வேண்டும் என்று கூறினார். நானும் பேசலாம் என்று கூறினேன். அவர் என்னிடம், ‘நீங்கள் கையை பாதுகாக்க முழங்கையில் பேட் அணிந்து ஆடினால் உங்கள் ஆட்டம் வேறுபடுகிறது. நீங்கள் பேட்டை வீசும் முறை மாறுகிறது’ எனக் கூறினார். நான் அப்போது வரை அந்த ஆட்ட முறையைப் பற்றி, யாரிடமும் பேசியதுகூட கிடையாது. அவர் இந்த பேச்சைத் தொடங்குவதற்கு முன் நான் உங்கள் தீவிர ரசிகர் எனக் கூறி விட்டு பேச்சைத் தொடங்கினார். இந்த விஷயம் எனக்கு மட்டுமே தெரியும். இந்த சம்பவத்திற்குப் பிறகு எனது முழங்கை பேடின் வடிவத்தை நான் மாற்றி அமைத்தேன். அந்த நிகழ்வு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்போது அவரை சந்திக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. நீங்கள் அனைவரும் அவரை தேட உதவ வேண்டும்.” என்று கூறியுள்ளார்.


இதனைத்தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கர் இதைப் பற்றி தமிழிலும் டுவிட் செய்துள்ளார். அதில், “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், சச்சின் டெண்டுல்கருக்கு ஆலோசனை வழங்கிய செய்த அந்த தமிழரை டெண்டுல்கர் மட்டுமல்ல இப்போது நெட்டிசன்களும் அந்த நபர் யார் என்று தேடத் தொடங்கியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Sachin tendulkar searching chennai waiter for advice elbow guard change

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X