கொரோனா வைரஸ்க்கு எதிராக நாடே போராடிக் கொண்டிருக்க, தன் கணவர் தோனி பற்றிய தவறான தகவல்களுக்காக காட்டமாக அறிக்கை விட்டிருக்கிறார் சாக்ஷி தோனி.
Advertisment
கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் மிகக் கடுமையாக போராடி வருகின்றன.
நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
Advertisment
Advertisements
அரசாங்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, பிரபலங்கள் பலரும் தங்கள் இயன்ற உதவியை பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர்களின், சச்சின் டெண்டுல்கர், ரூ. 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். கங்குலி ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரிசியை விநியோகம் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் முகக் கவசங்களை தயாரித்து கொடுத்திருக்கின்றனர்.
இன்னும் பல விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் நிதியுதவியும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி, ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்ததாக இன்று சமூக தளங்களில் செய்திகள் வெளியானது. சில ஊடகங்களும் இதனை செய்தியாக ஒளிபரப்பின.
I request all media houses to stop carrying out false news at sensitive times like these ! Shame on You ! I wonder where responsible journalism has disappeared !
இதைத் தொடர்ந்து, சாக்ஷி தோனி தனது ட்விட்டரில், "இதுபோன்ற முக்கியமான நேரங்களில் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்! உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்! ஊடக அறம் எங்கே சென்றது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது!" என்று காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”