/tamil-ie/media/media_files/uploads/2020/03/a94.jpg)
Ranji trophy
நல்லவேளை இதுவொரு சர்வதேச கிரிக்கெட்டாகவோ, மிக முக்கியமான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் ஓவராகவோ அமையவில்லை. இல்லனா, நடந்த சம்பவத்துக்கு, கொரோனாவை விட மோசமான பாதிப்பை பேட்ஸ்மேன் சந்தித்திருக்க நேரிட்டிருக்கும்.
ராஜ்கோட்டில் நடந்து வந்த ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் பெங்கால் அணியும், சவுராஷ்டிரா அணியும் மோதின. இதில், சவுராஷ்டிரா முதல் இன்னிங்ஸில் 425 ரன்களும், பெங்கால் அணி 381 ரன்களும் எடுத்தன.
பராகுவே சிறையில் கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டினோ
எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் மூச்சைப் பிடித்து ஆடிக் கொண்டிருந்த பெங்கால் அணி, முடிந்த அளவுக்கு, சவுராஷ்டிராவுடன் மல்லுக்கட்டியது.
எப்படியும் முடித்துவிடலாம் என்று நினைத்த சவுராஷ்டிராவுக்கு, பெங்கால் தம் பிடித்து முதல் இன்னிங்ஸில் கரை சேர அதிர்ச்சிக்குள்ளானது.
இப்படியாக சென்றுக் கொண்டிருந்த ஆட்டத்தில், பெங்காலின் முதல் இன்னிங்ஸின் போது, சவுராஷ்டிரா கேப்டன் உணட்கட் ஓவரில், பெங்கால் வீரர் ஆகாஷ் தீப் ரன் அவுட் ஆன விதம், அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாது, அந்த அணியின் வீரர்கள், நிர்வாகம் என ஒட்டுமொத்தமாக அனைவரையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.
உணட்கட் வீசிய பந்தை ஸ்டெம்புக்கு வெளியே நின்றுக் கொண்டு எதிர்கொண்ட ஆகாஷ், பந்தை அடிக்காமல் விட்டார். பந்தை ரிசீவ் செய்த சவுராஷ்டிரா கீப்பர், ரன் அவுட் செய்ய த்ரோ அடிக்க, த்ரோ மிஸ் ஆகி, பவுலர் உணட்கட் கைக்கு வந்து சேர்ந்தது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தோல்வி - WV ராமனின் பணியை குறைத்து மதிப்பிட முடியாது
உணட்கட் சற்றும் தாமதிக்காமல் மீண்டும் ஸ்டெம்ப்பை நோக்கி ஏறிய, இம்முறை மிடில் ஸ்டெம்ப்பை பந்து தாக்கியது.
இந்த அனைத்து சம்பவத்தையும் கிரீசுக்கு வெளியே பார்வையாளராக நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் பேட்ஸ்மேன் ஆகாஷ்.
13, 2020Presence of mind ✅
Direct hit ✅
Wicket ✅
Watch how Saurashtra skipper Jaydev Unadkat ran out Akash Deep in the @paytm#RanjiTrophy 2019-20 #Final.
Video ???? https://t.co/gLr4p6rzzB#SAUvBENpic.twitter.com/tXKiGZPLPz
— BCCI Domestic (@BCCIdomestic)
Presence of mind ✅
— BCCI Domestic (@BCCIdomestic) March 13, 2020
Direct hit ✅
Wicket ✅
Watch how Saurashtra skipper Jaydev Unadkat ran out Akash Deep in the @paytm#RanjiTrophy 2019-20 #Final.
Video ???? https://t.co/gLr4p6rzzB#SAUvBENpic.twitter.com/tXKiGZPLPz
மூன்றாவது அம்பயர் ரிவியூ செய்து பார்க்கையில், பேட்ஸ்மேன் அவுட் என்பது க்ளீயராக தெரிய, தலையை தொங்கப்போட்டுக் கொண்டு வெளியேறினார் பார்வையாளர்.. சாரி, பேட்ஸ்மேன்.
எனினும், சவுராஷ்டிரா அணி முதன் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.