ஹிந்து முறைப்படி ‘ஆரத்தி’ எடுத்த மகள்…. டிவியை அடித்து நொறுக்கிய அப்ரிடி! (வைரல் வீடியோ)

இதில் கொடுமை என்னவெனில், அப்ரிடி அப்படி கூறியதற்கு, பார்வையாளர்களாக அரங்கில் அமர்ந்திருக்கும் பெண்கள் உற்சாகமாக கைத் தட்டுகின்றனர்

By: Updated: December 30, 2019, 07:49:23 PM

இவர் நல்லவரா? கெட்டவரா? என்ற பிஜிஎம் கிரிக்கெட் வீரர்களில் பாகிஸ்தானின் ஷகித் அப்ரிடிக்கு அருமையாக பொருந்தும். ஓரளவுக்கு ஜென்டில்மேன் கிரிக்கெட்டராக சர்வதேச போட்டிகளில் வலம் வந்த அப்ரிடி, அவ்வப் போது தனது கருத்துகளால் இந்திய ரசிகர்களின் வாயில் கடித்து மெல்லப்படுவார். அந்த வகையில், இது மற்றொரு சம்பவம்.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த அப்ரிடி, கேஷுவலாக ஒரு சம்பவத்தை போட்டுடைக்க பற்றிக் கொண்டது சமூக தளங்கள்.

டேனிஷ் கனேரியா சர்ச்சை குறித்து மனம் திறந்த இன்சமாம் உல் ஹக்

57 நொடிகள் ஓடக் கூடிய வைரல் வீடியோவில் ஒன்றில் பேட்டி எடுப்பவரின் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் அப்ரிடி, “எனது மனைவியால் நான் ஒருமுறை டிவியை அடித்து உடைத்துவிட்டேன். எப்போதும் தொலைக்காட்சியாக தனியாக பார்க்கும்படியும், குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டாமென்றும் எனது மனைவியை கேட்டுக் கொண்டேன். ஒருமுறை, எனது மகள் டிவி முன்பு நின்று கொண்டு, ‘ஆரத்தி’ எடுப்பது போன்று செய்து  கொண்டிருந்தார். அதைப் பார்த்த போது எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால், டிவியை அடித்து உடைத்துவிட்டேன்” என்றார்.

இது ஒண்ணு போதாதா!!!

ஹிந்துக்களில் வழிபாடு முறையான ஆரத்தி எடுப்பதை தான் அவரது மகள் செய்திருக்கிறார். இதற்காகவே, டிவியை போட்டு தான் உடைத்ததாக அப்ரிடி கூறியிருப்பதற்கு, ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

கோலியோ, ரோஹித்தோ அல்ல… கால்களின்றி ரன் ஓடும் இந்த மாற்றுத்திறனாளி சிறுவனே 2019 ஹீரோ (வீடியோ)

இதில் கொடுமை என்னவெனில், அவர் அப்படி கூறியதற்கு, பார்வையாளர்களாக அரங்கில் அமர்ந்திருக்கும் பெண்கள் உற்சாகமாக கைத் தட்டுகின்றனர்.

சமீபத்தில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தான் ஹிந்து எனும் ஒரே காரணத்திற்காக இதர வீரர்களால் பல முறை அவமானப்படுத்தப்பட்டார் என்று சோயப் அக்தர் கூறியிருந்தார். அதற்கு, கனேரியாவும் ‘என்னை அப்படித் தான் நடத்தினார்கள்’ என்று கூற, பாக்., முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Shahid afridi smashed tv after daughter imitated aarti viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X