கிரிக்கெட் என்பது நம் எதிர்கால சந்ததிகளின் ரத்தத்தில் எப்படி ஊறிப் போயிருக்கிறது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாக பார்க்கப்படுகிறது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. கிரிக்கெட் வீரர்கள் ஹீரோக்களாக எப்படி கொண்டாடப்படுகிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி.
மொத்தத்தில் கிரிக்கெட் பிடிக்காதவர்களுக்கும் இதற்கு பிறகு கிரிக்கெட் லேசாவாவது பிடிக்கும் என்பதற்கும் இந்த வீடியோவே சாட்சி.
நிகழ் தசாப்தத்தின் அரசன் – விராட் கோலி எனும் வெற்றி ‘உள்ளான்’
ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இரண்டு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன், மற்ற மாணவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறான். அதில், பக்காவாக பேட்டிங் செய்யும் அந்த சிறுவன், ஷாட் அடித்துவிட்டு புயல் வேகத்தில் தரையில் கை ஊன்றி ஊன்றி தாவி ஓடுகிறான்.
Left me speechless! #DeterminedMind A must watch to all those who love cricket and even those who don’t like it. Got to see this in FB, would love to know the details of this boy. @CSKFansOfficial @Whistlepodu4Csk pic.twitter.com/kM0SWACrKl
— Sudha Ramen IFS ???????? (@SudhaRamenIFS) December 26, 2019
அவனது இந்த முயற்சி நம்மை ஒரு நொடி கண் கலங்க வைக்கிறது.
ஆனால், இங்கு பரிதாபம் தேவை இல்லை. ஊக்கம், நம்பிக்கை இதுவே தேவை.
‘அந்த சிறுவன் யார் என்ற விவரம் அறிய விரும்புகிறேன்’ என்று அதிகாரி சுமா ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.