டேக் டைவர்ஷன் எடுத்த வார்னேவின் மேஜிக் டெலிவரி; 27 வருடங்களுக்கு முன்பு (வீடியோ)

1993 ஆம் ஆண்டு, இதே நாளில் ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங் லெஜண்ட் ஷேன் வார்ன், தனது ஒரு பந்து வீச்சால் கிரிக்கெட் உலகை திகைக்க வைத்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கேட்டிங்கை கவர்ந்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அந்த அணிக்கு எதிராக பந்து வீசிய வார்னே, லெக் ஸ்டெம்புக்கு வெளியே பந்தை பிட்ச் செய்தார். அவர் உத்தரவுக்கு அடிபணிந்து அங்கே பிட்ச் ஆன அந்த பந்து, அவரது மாயாஜாலத்தில் டேக் டைவர்ஷன் எடுத்து, ஆஃப் […]

shane warne, shane warne ball of the century, ஷேன் வார்னே, கிரிக்கெட் செய்திகள், mike gatting, shane warne 1st ashes test, shane warne england first over, shane warne controversy
shane warne, shane warne ball of the century, ஷேன் வார்னே, கிரிக்கெட் செய்திகள், mike gatting, shane warne 1st ashes test, shane warne england first over, shane warne controversy

1993 ஆம் ஆண்டு, இதே நாளில் ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலிங் லெஜண்ட் ஷேன் வார்ன், தனது ஒரு பந்து வீச்சால் கிரிக்கெட் உலகை திகைக்க வைத்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கேட்டிங்கை கவர்ந்தார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அந்த அணிக்கு எதிராக பந்து வீசிய வார்னே, லெக் ஸ்டெம்புக்கு வெளியே பந்தை பிட்ச் செய்தார். அவர் உத்தரவுக்கு அடிபணிந்து அங்கே பிட்ச் ஆன அந்த பந்து, அவரது மாயாஜாலத்தில் டேக் டைவர்ஷன் எடுத்து, ஆஃப் ஸ்டெம்பின் மேல் பகுதியை தாக்கியது. பைல்ஸ் எகிற, என்ன நடக்கிறது என்றே தெரியாமல் திக்கற்று நின்றார் மைக்.


நூற்றாண்டுகள் ஆனாலும், ‘எங்கடா இந்த பக்கம் வந்த பாலு’ மொமண்ட்டை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது. குறிப்பாக, மைக் கேட்டிங்கால் என்றும் அந்த நொடிகளை மறக்க முடியாது.

‘அன்றோடு என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்’ – ஹர்திக் பாண்ட்யா ஃபீலிங்ஸ்

இதில், மேலும் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், அந்த போட்டி நடந்த போது வார்னேவின் வயது 23. தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முதலாக அவர் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய தொடர் அது. அதுவும் என்ன தொடர் தெரியும்? ஆஷஸ்.

ஆம்! ஆஷஸ் தொடரில் தான் வார்னே இந்த மேஜிக் பந்தை ரிலீஸ் செய்து, கிரிக்கெட் உலகில் தனக்கான என்ட்ரியை அழுத்தமாக பதிவு செய்தார்.

பிறகு, கிரிக்கெட்டில் இருந்து வார்னே ஓய்வு பெறும் போது, மைக் கேட்டிங் ஒரு கடிதம் தீட்டி, அதில் வார்னேவுக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shane warne magic spin against mike gatting video

Next Story
‘அன்றோடு என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்றே நினைத்தேன்’ – ஹர்திக் பாண்ட்யா ஃபீலிங்ஸ்hardik pandya injury, hardik pandya asia cup back injury, hardik pandya back injury, ஹர்திக் பாண்ட்யா, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள், hardik pandya interview, harsha bhogle interview with hardik pandya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com