முன்னாள் கேப்டனை ‘ஷூ’ தூக்க வைத்த பாகிஸ்தான் – கொந்தளித்த அக்தர் (வீடியோ)

சர்ஃபராஸ் எத்தகைய கீழ்த்தரமான மற்றும் பலவீனமான மனிதர் என்பதை இது காட்டுகிறது

வாசிம் அக்ரம் எனக்கு ஒருபோதும் காலணிகளைக் கொண்டு வரவில்லை

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அஹ்மத், களத்தில் விளையாடிக் கொண்டிருந்த பேட்ஸ்மேன்களுக்கு ஷூ மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து மிக காட்டமாக பேசியுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், “எனக்கு அந்த காட்சி பிடிக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தானை வழிநடத்திய மற்றும் நாட்டிற்காக சாம்பியன்ஸ் டிராபியை வென்ற வீரருக்கு இதை நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் அவரை காலணிகளை சுமக்கச் செய்துள்ளீர்கள். அவர் அதை தானே செய்திருந்தால், அவரை நிறுத்துங்கள். வாசிம் அக்ரம் எனக்கு ஒருபோதும் காலணிகளைக் கொண்டு வரவில்லை.

50 போட்டிகளில் முதல் டக்! எகிறிய ஸ்டெம்ப்ஸ்; திகைத்த ஸ்டோக்ஸ் (வீடியோ)

சர்ஃபராஸ் எத்தகைய கீழ்த்தரமான மற்றும் பலவீனமான மனிதர் என்பதை இது காட்டுகிறது. அவர் காலணிகளை எடுத்துச் சென்றதைப் போலவே பாகிஸ்தானையும் வழிநடத்தியிருக்க வேண்டும். அதனால்தான் மிக்கி ஆர்தர் எப்போதும் அவரை ஆதிக்கம் செலுத்தினார். காலணிகளை எடுத்துச் செல்வது ஒரு பிரச்சினை என்று நான் கூறவில்லை, ஆனால் முன்னாள் கேப்டன் அதைச் செய்யக் கூடாது” என்று அக்தர் கூறினார்.

எனினும், அக்தரின் கருத்துக்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரும், தேர்வுக் குழுத் தலைவருமான மிஸ்பா உல் ஹக், “இந்த வகை விவாதம் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும். நான் கேப்டனாக இருந்தபோது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெளியே அமர்ந்திருந்தபோது, 12 ஆவது நபரின் கடமைகளையும் செய்தேன். அதைச் செய்வதில் வெட்கமில்லை.

சோகத்தில் முடிந்த சைக்கிள் ரேஸ்; கோமாவில் வீரர் – பதைபதைக்க வைக்கும் வீடியோ

சர்ஃபராஸ் ஒரு சிறந்த மனிதர் மற்றும் வீரர். இது ஒரு அணி விளையாட்டு என்று அவருக்குத் தெரியும். வீரர்கள் வெளியில் பயிற்சி செய்யும்போது, மற்ற வீரர்கள் உதவ வேண்டும். இது அவமரியாதைக்குரிய விஷயம் அல்ல. உண்மையில், சர்ஃபராஸ் அதைச் செய்ய கவலைப்படவில்லை என்பது பெரிய விஷயம். மேலும், இது ஒரு நல்ல அணிக்கான அடையாளம்” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Shoaib akhtar slams management on seeing sarfaraz ahmed carry shoes eng vs pak

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com