Advertisment

ரஜினி 'சூப்பர் ஸ்டார்'! ஆனால் அஜித், விஜய்....? - குமார் சங்கக்காரா பதிலால் ரசிகர்கள் வருத்தம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kumar sangakkara about rajini, ajith, vijay, குமார் சங்கக்காரா, அஜித், விஜய், ரஜினி, கிரிக்கெட் செய்திகள்

kumar sangakkara about rajini, ajith, vijay, குமார் சங்கக்காரா, அஜித், விஜய், ரஜினி, கிரிக்கெட் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணி என்றாலே, நம்மாளுங்களுக்கு ஒருவித காண்டு ஏற்படுவதுண்டு. அதே டீமுகிட்ட தோற்றாலும் பாகிஸ்தானிடமோ, இலங்கையிடமோ, வங்கதேசத்திடமோ இந்தியா தோற்றுவிடக் கூடாது என்பதில் ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பார்கள். ஏனெனில், அந்தந்த அணிகள் மற்றும் அதன் ரசிகர்கள் அடிக்கும் லூட்டி அப்படி.

Advertisment

இந்திய வீரர்கள் அவுட்டாகும் போது மோசமாக கொள்வது, நாகினி ஆட்டம் போடுவது என்று செய்கை நிறைய அரங்கேறும். அதனால் காண்டாகும் இந்திய ரசிகர்கள், சின்ஹா அணிகளிடம் விளையாடும் போது, சற்று காட்டமாகவே இருப்பார்கள்.

பாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி - முகமது ஷமியின் 'ஓ மை கடவுளே' மொமண்ட்

இருப்பினும்,  அணிகளில் இந்திய ரசிகர்களுக்கு பிடித்த  இருப்பார்கள். பாகிஸ்தானை பொறுத்தவரை இன்சமாம் உல் ஹக், யூனுஸ் கான் போன்ற வீரர்களை இந்திய ரசிகர்கள் ரசிப்பார்கள். இலங்கையில் சங்கக்காரா, முரளிதரன், மலிங்கா உள்ளிட்டோருக்கு இந்தியாவிலேயே ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில், இலங்கை லெஜண்ட் குமார் சங்கக்காரா, பிரபல தமிழ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், "நான் சென்னைக்கு நிறைய முறை வந்திருக்கிறேன். ஆனால், வெளியே அதிகம் சென்றதில்லை. ஹோட்டலில் தான் செலவிட்டோம். எங்களை சுற்றி எப்போதும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 என்று அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்படுகிறார். அவரால், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட முடிகிறது. மற்ற நாடுகளில், சிறந்த டெஸ்ட் வீரர் ஒருவர் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருப்பார். அவரால் சிறந்த ஒருநாள் வீரராக செயல்பட முடியாமல் போகலாம். இதனால், ஒருநாள் அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்யும் சூழல் உள்ளது. அந்தந்த அணிகளின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே, அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டனா அல்லது வெவ்வேறு கேப்டனா என்று முடிவெடுக்க முடியும்.

கிரிக்கெட்டில் எனது நெருங்கிய நண்பர் என்றால் அது மஹேலா ஜெயவர்த்தனே தான்" என்றார்.

தவிர ரேபிட் ஃபயர் கேள்விகளுக்கும் பதிலளித்த சங்கக்காரா, ஒவ்வொரு வீரர்களின் பெயரை சொல்லும் போதும், அவர்களை பற்றிய தனது எண்ணத்தை ஒற்றை வரியில் பதிலளித்தார்.

சனத் ஜெயசூர்யா - எக்ஸ்ப்ளோஸிவ்

முத்தையா முரளிதரன் - ஜீனியஸ்

மஹேலா ஜெயவர்த்தனே - நேர்த்தி

சச்சின் டெண்டுல்கர் - லெஜண்ட்

தோனி - இதுக்கு மட்டும் சற்று யோசித்து அவர் அளித்த பதில், ஸ்மார்ட்

விராட் கோலி - ஜீனியஸ்

என்று பதிலளித்தார்.

இறுதியாக, சென்னையின் சூப்பர் ஸ்டார்கள் பற்றி தெரியுமா? என்ற கேள்விக்கு, 'எனக்கு தெரிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்' என்று சங்கக்காரா கூற ரஜினி ரசிகர்களுக்கு ஏக குஷி. அதேபோல், 'நா ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி' என்ற டயலாக்கையும் பேசி அசத்தினார்.

கிரிக்கெட்டை ஓவர்டேக் செய்த ஹாக்கி - தனி நபர் இடைவெளியுடன் தொடங்கிய பயிற்சி

விஜய், அஜித் குறித்த கேள்விக்கு, 'அவர்கள் பெயர்களை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அந்தளவுக்கு எனக்கு குறிப்பாக தெரியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித், விஜய் இன்றைய தமிழ் சினிமாவின் இரு துருவங்கள். குறிப்பாக, விஜய் படங்கள் இலங்கையில் கல்லா கட்டும். தமிழகத்தில் எப்படியொரு ஓப்பனிங் விஜய்க்கு இருக்குமோ, அதே ஓப்பனிங் சற்றும் குறையாமல் இலங்கையில் பார்க்க முடியும். ஆனால், விஜய்யை அவ்வளவாக தெரியாது என்று சங்கக்காரா கூறியதால், ரசிகர்கள் பலரும் 'அவருக்கு உலக ஞானம் அவ்வளவு தான் போல' என்ற ரீதியில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajinikanth Kumar Sangakaara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment