எம்.எஸ். தோனி, 2011 உலகக் கோப்பையை அணிக்கு வென்றுக் கொடுத்ததே, இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த நாள் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 2003 ஆம் ஆண்டில் தனது தலைமையின் கீழ் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை விளையாடி, கோப்பையை முடியாமல் ஏந்த போன பல வீரர்கள், 2011 உலகக் கோப்பையில் அந்த பெருமையை நிறைவேற்றிக் கொண்டனர் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
12, 2020
"என்னைப் பொறுத்தவரை, 2011 ல் இந்தியா உலகக் கோப்பையை வென்றதே மிகப் பெரிய நாளாகும். தோனி ... அந்த ஷாட், கடைசி பந்தில் அடித்த அந்த சிக்ஸ், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும், அது அற்புதமான தருணம்" என்றும் கங்குலி கூறினார்.
‘இவ்வளவு சீக்கிரம் போய்விட்டாரா?’ சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்
இந்திய கிரிக்கெட்டில் தனது கால நினைவலைகளை பகிர்ந்து கொண்ட கங்குலி, "2011 உலகக் கோப்பையை வென்ற அணியில் அங்கம் வகித்த ஏழு அல்லது எட்டு வீரர்கள், எனது கேப்டன்ஷிப்பில் தங்கள் கரியரை தொடங்கினர். சேவாக், தோனி, யுவராஜ், ஜாகீர், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா போன்றவர்கள் இதில் அடக்கம். ஒரு கேப்டனாக அவர்களை நான் விட்டுச் சென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உள்நாடு, வெளிநாடு என எங்கும் வெல்லும் திறனைக் கொண்ட ஒரு அணியைத் தான் நான் விட்டுச் சென்றேன் என்பது எனக்கு பெருமையாகும்.
சச்சின், சேவாக், யுவராஜ், ஜாஹீர், நெஹ்ரா ஆகியோர் 2003 உலகக் கோப்பையிலும் விளையாடியவர்கள். 2011 உலகக் கோப்பையிலும் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“