Advertisment

'முதலில் நாடு' - கங்குலியின் ஒற்றை வரி பதிலும், முன்னாள் கேப்டனின் புலம்பலும்

முதன்மையான உள்நாட்டு போட்டியான ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டியின் போது சர்வதேச விளையாட்டுகளை திட்டமிடக்கூடாது என்றும் அவர் பரிந்துரைத்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'முதலில் நாடு' - கங்குலியின் ஒற்றை வரி பதிலும், முன்னாள் கேப்டனின் புலம்பலும்

சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் (எஸ்சிஏ) கோரிக்கையை, ‘நாட்டுக்கு விளையாடுவதற்கே முன்னுரிமை' என்ற பதிலுடன் நிராகரித்திருப்பதால், ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம், புஜாரா சவுராஷ்டிரா அணிக்காகவும், ரிதிமான் சஹா மேற்கு வங்க அணிக்காகவும் விளையாடுவார்கள். மார்ச் 12 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ஜடேஜா இடம் பெற்றிருப்பதால், மார்ச் 9ம்  தேதி தொடங்கும் ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் அவர் ஆடமாட்டார்.

Advertisment

பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஜடேஜாவை விளையாட அனுமதிக்குமாறு எஸ்சிஏ தலைவர் ஜெய்தேவ் ஷா கேட்டுக் கொண்டார். "நான் அவருடன் <கங்குலியுடன்> பேசினேன், ‘நாட்டுக்கு விளையாடுவதற்கே முன்னுரிமை' என்பதால் ஜடேஜாவை ரஞ்சி இறுதிப் போட்டியில் விளையாட அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது" என்ற உண்மையை ஷா வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் முறையாக புடவையுடன் கிரிக்கெட் - மிதாலி ராஜை கொண்டாடும் ரசிகர்கள் (வீடியோ)

அதுமட்டுமின்றி, முதன்மையான உள்நாட்டு போட்டியான ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டியின் போது சர்வதேச விளையாட்டுகளை திட்டமிடக்கூடாது என்றும் அவர் பரிந்துரைத்தார். ஐபிஎல்-லின் போது கடைபிடிக்கப்படும் கொள்கையை இந்த இடத்தில் ஷா எடுத்துக் காட்டுகிறார்.

"மக்கள் தங்கள் முதன்மையான உள்நாட்டு கிரிக்கெட்டைப் பார்க்க வேண்டும் என்று பிசிசிஐ விரும்பினால், இனிமேல் ரஞ்சி இறுதிப் போட்டியில் எந்த சர்வதேச ஆட்டமும் நடத்தப்படக்கூடாது. இது எனது பரிந்துரை. ஐ.பி.எல் போது பி.சி.சி.ஐ ஒரு சர்வதேச போட்டியை வைத்திருக்குமா? இல்லை, ஏனெனில் அது பணம் தருகிறது. இறுதிப் போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் விளையாடியிருந்தால் மட்டுமே ரஞ்சி டிராபியை பிரபலப்படுத்த முடியும். ரஞ்சி இறுதிப் போட்டி காலத்தில், எந்த சர்வதேச கிரிக்கெட்டையும் விளையாட வேண்டாம். ஒழுங்கான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்”என்று முன்னாள் சவுராஷ்டிரா கேப்டன் ஷா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தோனி பற்றிய உங்கள் திட்டம் என்ன? - நேர்காணலில் சுனில் ஜோஷி அளித்த பதில் இதுதான்

"அவர் (ஜடேஜா) எங்களுக்காக ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விளையாடுவதை பார்க்க நாங்கள் விரும்பினோம். ஜடேஜா மட்டும் ஏன்... முகமது ஷமி மேற்கு வங்க அணிக்காக விளையாடுவதை பார்க்கவும் நாங்கள் விரும்பினோம்" என்றார் ஷா. இது கடந்த எட்டு ஆண்டுகளில் சவுராஷ்டிரா அணிக்கு நான்காவது ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியாக இருக்கும், ஜடேஜாவின் இணைந்திருந்தால், அது எங்கள் அணிக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்திருக்கலாம் என்று ஷா நினைக்கிறார்.

ராஜ்கோட்டில் நடந்த அரையிறுதியில் சவுராஷ்டிரா அணி, குஜராத்தை 91 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இறுதிப் போட்டியும் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Bcci Ranji Trophy Saurav Ganguly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment