Advertisment

South Africa vs West Indies Score: தென்னாப்பிரிக்காவுக்கு உதவிய மழை; நெட்டிசன்கள் கிண்டல்!

ICC World Cup 2019, South Africa vs West Indies Streaming: ஆட்டம் மழையால் பாதிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
South Africa vs West Indies Live, South Africa vs West Indies Match 2019

South Africa vs West Indies Live, South Africa vs West Indies Match 2019

South Africa vs West Indies Match Score Updates: உலகக் கோப்பை 2019 தொடரில், சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நேற்று (ஜூன்.10) ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் மோதின.

Advertisment

2 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் 7வது இடத்தில் உள்ளது. அதேசமயம், விளையாடிய மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில், முதலில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தது. 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்க, மழை பெய்யத் தொடங்கியது. இறுதிவரை மழை விடாத காரணத்தால், ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க - சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் யுவ்ராஜ் சிங்! சிலாகிக்கும் ரசிகர்கள்!

இதுவரை பூஜ்யத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, மழையின் புண்ணியத்தால் புள்ளியை பெற்றிருக்கிறது என்று ரசிகர்கள் தென்.ஆ அணியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

உலகக் கோப்பை ரேஸில் தொடர வேண்டுமெனில், இனி நடக்கவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அதிக ரன் ரேட்டுடன் வெற்றிப் பெற்றே தீர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

World Cup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment