scorecardresearch

ஐ.எஸ்.எல்.: இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறுமா கேரளா..? அஸ்வினை புகழ்ந்த ரோஹித்.. மேலும் செய்திகள்

உலகின் ‘நம்பர் ஒன்’ நட்சத்திமான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், பிரான்சின் 26ம் நிலை வீரரான மோன்பில்சை எதிர்கொண்டார்.

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியின் 2-வது சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஜாம்ஷெட்பூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அரைஇறுதியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு எதிரான அணியுடன் 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் அதிக வெற்றி அல்லது கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதன் முதலாவது சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூருக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் கேரளா டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அஸ்வினை புகழ்ந்த ரோஹித்!

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்த நிலையில், அணியின் வெற்றி குறித்தும், வீரர்கள் செயல்பட்ட விதம் குறித்தும் கோப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘ரவீந்திர ஜடேஜா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறார். அது அணிக்கு பலமாகும்.

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அந்த பார்மை டெஸ்ட் தொடரிலும் தொடர்ந்தார். புஜாரா, ரஹானே போன்ற வீரர்களின் பெரிய இடத்தை நிரப்புவது எப்படி என்பது அவருக்கு தெரியும். அவர் அந்த பணியை சரியாக செய்து வருகிறார். ரிஷப் பண்ட் ஒவ்வொரு ஆட்டத்திலும் மேம்பட்டு வருகிறார். அஸ்வினிடம் எப்பொழுது பந்தை கொடுத்தாலும் வெற்றிகரமாக பந்து வீசுகிறார். அவர் எல்லா காலங்களிலும் சிறந்த வீரர் ஆவார்’ என்றார்.

பஞ்சாப் அணிக்கு இங்கிலைந்து முன்னாள் வீரர் ஆலோசகர்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான ஜூலியன் ரோஸ் வுட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

15-வது ஐ.பி.எல். போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரரான 53 வயது ஜூலியன் ரோஸ் வுட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரோஸ் வுட் வலுவான அதிரடி பேட்டிங் பயிற்சி அளிப்பதில் கைதேர்ந்தவர் ஆவார். அவர் ஐபிஎல், பிக் பாஷ் லீக் (பிபிஎல்) மற்றும் பிற டி20 லீக் முழுவதும் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

ரஷ்ய வீரருக்கு அதிர்ச்சி அளித்த பிரான்ஸ் வீரர்!

பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையரில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ நட்சத்திமான ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ், பிரான்சின் 26ம் நிலை வீரரான மோன்பில்சை எதிர்கொண்டார்.

இதில் மோன்பில்ஸ், மெத்வதேவை 4-6, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் இரண்டு மணி நேரத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்து நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

கிரிக்கெட் வீரர்களிடம் பீஸ்ட் அப்டேட்… அஜித் ஃபேன்ஸ் ரூட்டில் விஜய் ரசிகர்கள் !

35 வயதான மோன்பில்ஸ், 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகின் நம்பர் ஒன் வீரரை வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sports news round up interesting sports rohith sharma