Advertisment

கிரிக்கெட்: இந்திய மகளிர் சாதனைகள்.. பெங்களூரு அணிக்கு இதுவரை எத்தனை கேப்டன்கள்.. மேலும் செய்திகள்

அவரை ரூ.7 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. பெங்களூரு அணியின் 7-ஆவது கேப்டன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

author-image
WebDesk
New Update
கிரிக்கெட்: இந்திய மகளிர் சாதனைகள்.. பெங்களூரு அணிக்கு இதுவரை எத்தனை கேப்டன்கள்.. மேலும் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Advertisment

இந்திய வீராங்கனைகள் ஹர்மன் ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சதம் பதிவு செய்து அசத்தினர்.
இந்த ஆட்டத்தில் சில சாதனைகள் இந்திய அணி செய்தது.

அந்தச் சாதனை பட்டியலை பார்ப்போம் வாருங்கள்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது இந்தியா. உலகக் கோப்பை தொடரில் 300 ரன்களை இந்திய மகளிர் அணி கடந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2013இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

இதேபோல், ஸ்மிருதி மந்தனா-ஹன்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் கூட்டணி 4-ஆவது விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய ஜோடி குவித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

மேலும், உலகக் கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் இருவர் சதம் பதிவு செய்ததும் இதுவே முதல் தடவையாகும்.

பந்துவீச்சில் சாதனை

இந்திய பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியபோது உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை லின் புல்ஸ்டோன்ஸ் (ஆஸி.,) சாதனையை முறியடித்தார். ஜூலன் கோஸ்வாமி உலகக் கோப்பை தொடரில் இதுவரை 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெற்றார்.

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு இவர் தான் கேப்டன்

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் பெங்களூரு அணிக்கு யார் கேப்டன் என்ற சர்பிரைஸ் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பெங்களூரு அணியின்க கேப்டனாக பிளெஸ்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடிய இவர், அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவரை ரூ.7 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. பெங்களூரு அணியின் 7-ஆவது கேப்டன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு ராகுல் டிராவிட், பீட்டர்சன், கும்ப்ளே, வெட்டோரி, கோலி, வாட்சன் ஆகியோர் கேப்டன் பதவியை வகித்திருக்கின்றனர்.

2ஆவது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இவர் தான் அதிக ஸ்கோர்

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால்(4) மற்றும் ரோகித் சர்மா(15) இருவரும் வெளியேறினர்.

இதையடுத்து ஹனுமா விகாரியும் விராட் கோலியும் இணைந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் இந்த கூட்டணியை இலங்கை பந்துவீச்சாளர்கள் தகர்த்தனர். ஹனுமா விகாரி 31 ரன்கள் எடுத்த நிலையில், ஜெயவிக்ரமா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தனி ஆளாக போராடிய ஸ்ரேயஸ் அய்யர் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 59.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
தனி ஆளாக 98 பந்துகளஇல் 92 ரன்களை எடுத்தார் ஸ்ரேயஸ் அய்யர். அவர் மொத்தம் 10 பவுண்டரிகளையும் 4 சிக்ஸர்களையும் விரட்டினார்.

முதல் இன்னிங்ஸில் அதிக ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் ஸ்ரேயஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டையைக் கிளப்பும் ஆஸி., வீரர்!

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் கராச்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

பறந்து பறந்து கேட்ச் பிடித்த ஆஸி,.வீரர்… வைரலாகும் ‘வாட் அ கேட்ச் மொமெண்ட்’

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா சதமடித்து அசத்தினார். 150க்கும் அதிகமான ரன்களை விரட்டி அசத்தி வருகிறார் கவாஜா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Tamil Sports Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment