SRH Vs RR Live Score Updates and match highlights in tamil: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று துபாயில் நடந்த 40 -வது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து அந்த அணியின் எவின் லூயிஸ் - யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க முயன்ற இந்த ஜோடியில் எவின் லூயிஸ் புவனேஸ்வர் குமார் வேகத்தில் சிக்கி 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மறுமுனையில் இருந்த யஷாஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்து வந்த இந்த ஜோடியில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளை ஓட விட்ட யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். எனினும், பின்னர் வந்த மஹிபால் லோமோருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அணிக்கு வலுவான ரன்களை அதிரடியாக சேர்த்தார்.
தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடந்தார். மேலும் அவர் 81 ரன்கள் சேர்க்கையில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றும் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் சதம் விளாசி மிரட்சியை ஏற்படுத்துவார் என பெரிதும் எதிர்ப்பார்க்கையில் சித்தார்த் கவுல் வீசிய 19.2 ஓவரில் ஜேசன் ஹோல்டர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சஞ்சு சாம்சனுடன் ஆட்டமிழ்காமல் களத்தில் இருந்த மஹிபால் லோமோர் 1சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசி 29 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் அணியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய சித்தார்த் கவுல் 2 விக்கெட்டையும், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. தொடக்க ஆட்டக்காரரும், அறிமுக வீரருமான ஜேசன் ராய் அரைசதம் கடந்து அசத்தினார். மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பந்துகளை விரட்டிய அவர் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளை விளாசி 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இவரது விக்கெட்டுக்கு பிறகு வந்த கேப்டன் வில்லியம்சன் (51) மிகவும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் உறுதுணையாக ஆடிய விருத்திமான் சாஹா (18), அபிஷேக் சர்மா (21) தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அந்த அணி 18.3 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 2 புள்ளிகளைப் பெற்றுள்ள ஐதராபாத் அணி பட்டியலில் 8வது இடத்திலேயே நீடித்து வருகிறது. பந்து வீச்சில் சொதப்பி தோல்வியை தழுவியுள்ள ராஜஸ்தான் அணி 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி இனி வரும் 4 போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
Here's how the Points Table looks after Match 40 of the #VIVOIPL 👇 #SRHvRR pic.twitter.com/JaqR6yFSaZ
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:20 (IST) 27 Sep 2021ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ஐதராபாத் அணி!
165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
🙌🙌🙌srhvrr vivoipl https://t.co/TN3tS5tx56 pic.twitter.com/ZiKBBT1MuW
— IndianPremierLeague (@IPL) September 27, 2021 - 22:52 (IST) 27 Sep 2021விக்கெட் எடுக்க திணறும் ராஜஸ்தான்; வெற்றி இலக்கை நோக்கி ஐதராபாத்!
ஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணிக்கு வெற்றிக்கு 18 பந்துகளில் 22 ரன்கள் தேவை!
expresssports | sportsupdate || விக்கெட் எடுக்க திணறும் ராஜஸ்தான்; வெற்றி இலக்கை நோக்கி ஐதராபாத்!srh - வெற்றிக்கு 18 பந்துகளில் 22 ரன்கள் தேவை!ipl2021 | uae | crickettwitter | rr | srhvrr
— IE Tamil (@IeTamil) September 27, 2021
லைவ் அப்டேட்ஸ்...https://t.co/jYwOkwnOQr - 22:35 (IST) 27 Sep 202115 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணி 15 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
- 22:30 (IST) 27 Sep 2021ஐதராபாத் வெற்றிக்கு 36 பந்துகளில் 41ரன்கள் தேவை!
165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணி வெற்றி பெற 36 பந்துகளில் 41ரன்கள் தேவை.
- 22:21 (IST) 27 Sep 2021ஜேசன் ராய் அவுட்!
165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணியில் அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராய் 1 சிக்ஸர் 8 பவுண்டரிகளை விரட்டி 60 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- 22:14 (IST) 27 Sep 2021ஜேசன் ராய் அரைசதம்!
165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணியில் அதிரடியாக விளையாடி வரும் தொடக்க வீரரும், அறிமுக வீரருமான ஜேசன் ராய் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
FIFTY on debut for srh for @JasonRoy20 👏👏
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Live - https://t.co/3wrjO70JvR srhvrr vivoipl pic.twitter.com/njXOeedcZQ - 22:11 (IST) 27 Sep 202110 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி!
165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணி 10 ஓவர்கள் முடிவில் 90 ரன்கள் சேர்த்து 1 விக்கெட்டை இழந்துள்ளது.
- 21:59 (IST) 27 Sep 2021பவர் பிளே முடிவில் ஐதராபாத் அணி!
165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணியில் ஜேசன் ராய் - விருத்திமான் சாஹா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில், 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை விரட்டிய சாஹா 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பவர் பிளே முடிவில் ஐதராபாத் அணி 1 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் சேர்த்துள்ளது.
- 21:32 (IST) 27 Sep 2021165 ரன்கள் இலக்கு; ஐதராபாத் அணி பேட்டிங்!
165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் ஐதராபாத் அணியில் ஜேசன் ராய் - விருத்திமான் சாஹா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.
- 21:14 (IST) 27 Sep 2021ஐதராபாத் அணிக்கு 165 ரன்கள் இலக்கு!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி 164 ரன்கள் சேர்த்துள்ளது.
- 21:14 (IST) 27 Sep 2021சஞ்சு சாம்சன் அவுட்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 434 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ள சஞ்சு சாம்சன் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Sanju Samson's fine innings comes to an end on 82.
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Siddharth Kaul picks up his first wicket of the game.
Live - https://t.co/5Rht92KcVw srhvrr vivoipl pic.twitter.com/RhDMaKGj6S - 21:06 (IST) 27 Sep 2021ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் சஞ்சு சாம்சன்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தற்போது ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றும் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
- 21:01 (IST) 27 Sep 2021வலுவான நிலையில் ராஜஸ்தான்; சஞ்சு சாம்சன் அதிரடி!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு அதிரடியாக ரன் சேர்த்து வருகிறார். அந்த 18 ஓவர்கள் முடிவில் 153 ரன்களை குவித்துள்ளது.
- 20:51 (IST) 27 Sep 2021சஞ்சு சாம்சன் அதிரடி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி சற்றுமுன்வரை 16.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிவரும் கேப்டன் சாம்சன் 47 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 70 ரன்கள் குவித்துள்ளார்.
- 20:37 (IST) 27 Sep 2021100 ரன்களை கடந்த ராஜஸ்தான் அணி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி சற்றுமுன்வரை 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் சாம்சன் 38 ரன்களிலும், லேம்ரர் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 20:22 (IST) 27 Sep 20213-வது விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி சற்றுமுன்வரை 10.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. லிவிங்ஸ்டன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- 20:03 (IST) 27 Sep 2021பவர் பிளே முடிவில் ராஜஸ்தான்!
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் ராஜஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்துள்ள நிலையில் அந்த அணிக்கு நல்ல தொடக்க கிடைத்துள்ளது. தற்போது பவர் பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 49 ரன்களை சேர்த்துள்ளது.
- 19:47 (IST) 27 Sep 2021தந்தை அவுட் ஆனதும் விரக்தியடைந்த மகன்… சேரை ஓங்கி அடிக்கும் வைரல் காட்சி!
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பும்ராவின் பந்தில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்த நிலையில், விரக்கியடைந்த டிவில்லியர்ஸின் மகன் சேரை கையால் ஓங்கி அடிக்கும் காட்சி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
- 19:42 (IST) 27 Sep 2021ராஜஸ்தான் அணியின் எவின் லூயிஸ் அவுட்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ள நிலையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய எவின் லூயிஸ் - யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடியில் 6 ரன் சேர்த்த எவின் லூயிஸ் அவுட் ஆனார்.
Wicket!
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Short from @BhuviOfficial and Lewis's eyes light up, but he pulls this straight to Samad at deep square leg.
Live - https://t.co/3wrjO6J87h srhvrr vivoipl pic.twitter.com/25yfbv1kFY - 19:32 (IST) 27 Sep 2021ஆட்டம் இனிதே ஆரம்பம்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து அந்த அணியின் எவின் லூயிஸ் - யஷாஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளது.
Let's Play!
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Live - https://t.co/ok6FRQ5VHf srhvrr vivoipl pic.twitter.com/E572K5m6lF - 19:27 (IST) 27 Sep 2021ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
.@rajasthanroyals have won the toss and they will bat first against srh.
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Live - https://t.co/hhKTGSojjm srhvrr vivoipl pic.twitter.com/P9INTsd6RB - 19:23 (IST) 27 Sep 2021CSK vs KKR; சிஎஸ்கே கடைசி பந்தில் ‘த்ரில்’ வெற்றி; புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்!
கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற்றம்.
https://tamil.indianexpress.com/sports/csk-beat-kkr-in-last-ball-thriller-go-on-top-of-table-347055/
- 19:21 (IST) 27 Sep 2021இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (விளையாடும் லெவன்): ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ் (விளையாடும் லெவன்): எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிசூர் ரஹ்மான்
A look at the Playing XI for srhvrr
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Live - https://t.co/ok6FRQ5VHf srhvrr vivoipl pic.twitter.com/yt3Ra4KbKs - 19:20 (IST) 27 Sep 2021ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
.@rajasthanroyals have won the toss and they will bat first against srh.
— IndianPremierLeague (@IPL) September 27, 2021
Live - https://t.co/hhKTGSojjm srhvrr vivoipl pic.twitter.com/P9INTsd6RB - 19:20 (IST) 27 Sep 2021ஐதராபாத் அணியில் வார்னருக்கு பதில் ஜேசன் ராய் களம் இறங்குகிறார்!
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான டேவிட் வார்னர் இன்றை ஆட்டத்தில் களமிறங்கவில்லை அவருக்கு பதில் ஜேசன் ராய் களமிறங்குகிறார்.
.@JasonRoy20 is all smiles as he is set to make his debut for @SunRisers. 😊 👍vivoipl srhvrr pic.twitter.com/qKxpni5sXf
— IndianPremierLeague (@IPL) September 27, 2021 - 18:59 (IST) 27 Sep 2021நேருக்கு நேர்!
இந்த இரு அணிகள் மோதிய 14 ஆட்டங்களில் தலா 7 முறை இரு அணிகளும் வென்றுள்ள.
7-7 so far. ⚔️
— Rajasthan Royals (@rajasthanroyals) September 27, 2021
The Rashid Khan threat. 👀
Top 4 calling. 🤞🏻srhvrr, read it before you watch it. 👇🏻hallabol | ipl2021 - 18:57 (IST) 27 Sep 2021‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று மாலை 7:30 மணிக்கு துபாயில் நடக்கும் 40 -வது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.