கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் எந்தவொரு விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுகிறது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisment
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டு சகஜ நிலைக்கு திரும்பும் முன் இலங்கை இயல்பு நிலைக்கு திரும்பி விடும். இதனால் எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா கூறுகையில் ‘‘இந்தியாவுக்கு முன் இலங்கை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுவிடும். இதனால் ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்த முடியும். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுத இருக்கிறோம்’’ என்றார்.
மறுபுறம், ஐபிஎல் சீசன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டால் தனது அணி மகிழ்ச்சியாக இருக்கும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் தலைமை பயிற்சியாளர் சைமன் கேடிச் கூறியுள்ளார்.
குறிப்பாக ஆர்.சி.பியில் நாங்கள் வெளிநாட்டில் விளையாடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம், ஏனென்றால் எங்கள் வெளிநாட்டு வீரர்கள் பலர் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்கர்கள், அவர்கள் ஆஸ்திரேலிய நிலைமை சாதகமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”