இலங்கை வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்காவை திங்கட்கிழமை ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பன்னலா நகரில் பிடிபட்டபோது மதுஷங்கா இரண்டு கிராம் ஹெராயின் வைத்திருந்ததாக போலீஸ் அதிகாரி ஏ.எஃப்.பி-யிடம் தெரிவித்துள்ளார்.
ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறக்க முடியா பங்களிப்பு - விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்
கோவிட் -19 வைரஸ் பாதிப்பால், இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது 25 வயதான மதுஷங்கா, மற்றொரு நபருடன் தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். வெண்ணாப்புவாவில் பிறந்த மதுஷங்காவை இரண்டு வார காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
மார்ச் 20 முதல் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இலங்கை போலீசார் கிட்டத்தட்ட 65,000 பேரை கைது செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட உள்ளது.
2018 ஜனவரியில் நடந்த முத்தரப்பு போட்டி இறுதிப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிரான தனது ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்தபோது மதுஷங்கா புகழ் பெற்றார். மஷ்ரஃபே மோர்டசா, ரூபல் ஹொசைன் மற்றும் மஹ்முதுல்லா ஆகிய மூவரையும் ஹாட்ரிக் விக்கெட்டில் கைப்பற்றினார்.
வெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - பிசிசிஐ அதிருப்தியா?
அதன் பின்னர் அவர் ஒருநாள் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. இருப்பினும், அவர் அதே ஆண்டில் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடினார். ஆனால் காயம் காரணமாக நிடாஹாஸ் டிராபி 2018 க்கு முன்னதாக அவர் நிராகரிக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil