’அடுத்தாண்டு சி.எஸ்.கே-வுக்காக ரெய்னா விளையாடுவாரா?’ சீனிவாசன் பதில்

“தனிப்பட்ட பிரச்சினைகள்” காரணமாக தான் அவர் இந்தியா திரும்பியுள்ளதாக சீனிவாசன் அழுத்தமாகக் கூறினார்.

By: September 1, 2020, 9:55:30 AM

ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக  துபாய் சென்றிருந்த முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா போட்டியிலிருந்து விலகியது, ரசிகர்களுக்கு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்கும் என, சி.எஸ்.கே ஓனர் என்.சீனிவாசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒரு பஸ்சில் 24 பேர் மட்டுமே பயணம்… மீண்டும் பரபரப்பாகும் சென்னை ரோடுகள்!

“சுரேஷ் ரெய்னாவைப் பொருத்தவரை, அவர் சிஎஸ்கே-வுக்காக நிறைய செய்திருக்கிறார். அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் செய்த எல்லாவற்றிற்கும் எங்களிடம் மிகுந்த மரியாதையும் பாசமும் இருக்கிறது. சி.எஸ்.கே எப்போதும் அவருக்கு ஆதரவாக நிற்கும்” என சீனிவாசன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும், இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) போட்டியில், சிஎஸ்கே அணியிலிருந்து ரெய்னா திடீரென வெளியேறியது ரசிகர்கள் புருவங்களை உயர்த்த செய்தது. “தனிப்பட்ட காரணங்களுக்காக” அவர் வெளியேறுவதாக சி.எஸ்.கே உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 12 சீசன்களில் 193 போட்டிகளில் 5,368 ரன்கள், பகுதிநேர ஆஃப் ஸ்பின்னராக அவரது பயன்பாடு, எம்.எஸ்.தோனிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற ரெய்னாவின் வெளியேற்றம், மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் வென்ற சி.எஸ்.கே-வில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தனிப்பட்ட பிரச்சினைகள்” காரணமாக தான் அவர் இந்தியா திரும்பியுள்ளதாக சீனிவாசன் அழுத்தமாகக் கூறினார். “இதற்கு மேல் எதுவும் இல்லை. அவர் பக்கம் நாங்கள் எப்போதும் நிற்போம்” என்றும் அவர் கூறினார்.

ரெய்னா அடுத்த ஆண்டு சிஎஸ்கே-வுக்காக விளையாடுவாரா என்று கேட்டதற்கு, “அடுத்த வருடம் என்பது அடுத்த வருடம் தான். அவர் ஒரு சிறந்த வீரர். அவர் சி.எஸ்.கேவுக்கு மிகவும் முக்கியம், சி.எஸ்.கே அவருக்கு ஆதரவாக நிற்கும்” என்றார் சீனிவாசன்.

முன்னாள் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி தலைவர் ரெய்னாவின் வெற்றிடத்தை நிரப்புவது கடினம் என்று ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில், தோனியின் தலைமை குறித்தும், அது அணியை எவ்வாறு நிர்வகிக்க உதவும் என்பதையும் பற்றி பேசினார். “அவர் [ரெய்னா] ஒரு சிறந்த வீரர், ஆனால் அதை சிஎஸ்கே மேனேஜ் செய்துக் கொள்ளும். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

சிறுதானிய பிரியர்களே… சத்தான சிவப்புச் சோளம் இப்படி பயன்படுத்துங்க!

சீனிவாசன் ரெய்னாவை ஒரு நேர்மறையான அர்த்தத்துடன் ஒரு ப்ரிமா டோனா என்று அழைத்தார். ” ரெய்னாவுக்கு மாற்றாக குழு நிர்வாகம் யாரையும் இன்னும் முடிவு செய்யவில்லை. இது குழு நிர்வாகத்தின் பொறுப்பாகும். இதுவரை அவர்கள் யாரையும் செலெக்ட் செய்ததாக நான் நினைக்கவில்லை” என்றார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Suresh raina exit ipl 2020 csk n srinivasan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X