IND vs PAK T20 World Cup 2022 match highlights in tamil | Indian Express Tamil

IND vs PAK: பட்டையை கிளப்பிய கோலி, ஃபினிஷிங் கொடுத்த அஸ்வின்… இந்தியாவுக்கு திரில் வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

IND vs PAK  T20 World Cup 2022 Live Score in tamil
IND vs PAK T20 World Cup 2022 Live Cricket Score Streaming Online

IND vs PAK T20 World Cup 2022 match highlights in tamil: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை மெல்போர்னில் எதிர்கொண்டது.

மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் (0) – முகமது ரிஸ்வான் (4) ஜோடி அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் வந்த இப்திகார் அகமது அதிரடியாக விளையாடினர் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அரைசதம் விளாசினார். அவர் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஷமியின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். ஒரு முனையில் அடுத்தடுத்த விக்கெட் இழப்பு இருந்தாலும், மறுமுனையில் ஷான் மசூத் அவ்வப்போது பவுண்டரிகளை ஓட விட்டார். 5 பவுண்டரிகளை அடித்த அவர் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

முன்னதாக, இந்திய அணியின் அபார பந்துவீச்சில் ஷதாப் கான் (5), ஹைதர் அலி (2), முகமது நவாஸ் (9), ஆசிப் அலி (2) போன்றோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 159 ரன்கள் எடுத்தது. ஷான் மசூத் 52 ரன்களுடனும், ஹாரிஸ் ரவூப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையும் படியுங்கள்: IND vs PAK Live Streaming: இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

தொடர்ந்து 160 ரன்களை கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி பவர் பிளே முடிவதற்குள் கேப்டன் ரோகித் (4), ராகுல் (4), மற்றும் சூரிய குமார் யாதவ் (15) ஆகிய 3 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்து வந்தது. போதாக்குறைக்கு, விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல், பவர்-பிளே முடிந்த அடுத்த ஓவரின் முதல் பந்திலே ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இந்த நிலையில் களமாடிய ஹர்திக் பாண்டியா களத்தில் இருந்த கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடும் என்று எதிர்பாத்த நிலையில், பொறுமையாக விளையாடி வந்தனர். இதனால் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்து வந்தது. ஆட்டத்தில் 10 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி 45 ரன்கள் மட்டும் தான் எடுத்து இருந்தது.

இப்படி மிதவேகத்தை தொடர்ந்திருந்த இந்த ஜோடியில், ஒரு முனையில் கோலி பவுண்டரிகளை விரட்ட மறுமுனையில் பாண்டியா சிக்ஸர்களை பறக்கவிட்டார். பதிலுக்கு கோலியும் சிக்ஸர் விளாச இந்தியாவின் ரன் ரேட் விறுவிறுவென ஏறியது. ஆனால், பாகிஸ்தானின் சாதுரியான பந்துவீச்சு இந்தியாவுக்கு டெத் ஓவர்களில் கட்டையைக் கொடுத்தது. எனினும், அதிரடியை கைவிடாத கோலி 43 பந்துகளில் தனது 11வது அரைசதத்தை அடித்தார்.

இதையும் படியுங்கள்: முதல் பந்திலேயே பெரிய மீனை தூக்கிய அர்ஷ்தீப் சிங்: இன் ஸ்விங்கருக்கு பலியான பாபர் அசாம்

இந்தியாவின் வெற்றிக்கு ரன்கள் தேவைப்பட்டபோதெல்லாம் கோலி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி வந்தார். குறிப்பாக, ஷஹீன் அப்ரிடி வீசிய 18 வது ஓவரில் 2 பவுண்டரிகளையும், ஹரிஸ் ரவூப் வீசிய 19 வது ஓவரில் 2 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு மிரட்டினார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை முகமது நவாஸ் வீசினார்.

இதில் முதல் பந்தை சந்தித்த பாண்டியா (40 ரன்கள்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்து கோலி வசம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். கோலி 3வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். தற்போது இந்தியாவின் வெற்றிக்கு 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இது ஏற்கனவே பரபரப்பாக ஆட்டத்தை பார்த்து வந்த ரசிகர்களுக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நேரத்தில் 4வது பந்தை சந்தித்த கோலி லெக் சைடில் சிக்ஸர் பறக்க விட்டார். அந்த பந்து நோ-பால் என்று நடுவர் சைகை காட்ட, ஃப்ரீ ஹிட் பந்தை ஒய்டாக வீசினார் முகமது நவாஸ். இதனால் அவர் ரீ பால் வீச அந்த பந்தில் கோலி 3 ரன்கள் எடுத்தார். தற்போது இந்திய அணியின் வெற்றிக்கு 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், இந்தியாவின் வெற்றி உறுதி என ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், ஆட்டம் இன்னும் முடிவில்லை என்பதை காட்ட 5வது பந்தில் தினேஷ் கார்த்திக் கீப்பர் ரிஷ்வானால் அவுட் செய்யப்பட்டார்.

ஆட்டத்தின் கடைசி பந்தை சந்திக்க களமாடிய அஸ்வின் லெக் சைடில் வீசிய பந்தை சற்று ஸ்டம்புக்கு முன்புறமாக விலகி ஒய்டு விட்டார். பின்னர் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தை கவரில் லாவகமாக தூக்கி அடித்தார். அந்த பந்து பவுண்டரியை தொடவே இந்தியாவுக்கு திரில் வெற்றி கிடைத்தது. ஆட்டத்தில் இறுதி வரை சிறப்பாக விளையாடிய கோலி பட்டையை கிளப்பினார் என்றால், கடைசி பந்தில் பினிஷிங் கொடுத்து அசத்தினார் அஸ்வின்.

இறுதியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட கோலி 82 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருத்தை தட்டிச் சென்றார். இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சூப்பர் 12 சுற்று: இந்தியா vs நெதர்லாந்து

வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி இந்திய அணி அதன் 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது (23வது போட்டி, சூப்பர் 12). இந்த போட்டி சிட்னியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 12:30 மணிக்கு தொடங்குகிறது.

ICC Men's T20 World Cup, Australia, 2022Melbourne Cricket Ground (MCG), Melbourne   27 March 2023

India 160/6 (20.0)

vs

Pakistan   159/8 (20.0)

Match Ended ( Day – Super 12 – Match 4 ) India beat Pakistan by 4 wickets

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Live Updates
17:27 (IST) 23 Oct 2022
இந்தியாவுக்கு திரில் வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

17:11 (IST) 23 Oct 2022
இந்தியாவின் வெற்றிக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்தியாவின் வெற்றிக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் தேவை.

கோலி ரன்களுடனும் 74, ஹர்டிக் பாண்டியா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

17:08 (IST) 23 Oct 2022
மெல்போர்ன் மைதானம்: ரசிகர்கள் எண்ணிக்கை!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் 90, 293 பார்வையாளர்கள் குவிந்துள்ளனர்.

17:06 (IST) 23 Oct 2022
இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் தேவை.

கோலி ரன்களுடனும் 61, ஹர்டிக் பாண்டியா 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

17:03 (IST) 23 Oct 2022
11வது அரைசதம் அடித்த கோலி!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்தியாவின் விராட் கோலி 43 பந்துகளில் தனது 11வது அரைசதத்தை அடித்தார்.

16:56 (IST) 23 Oct 2022
இந்தியாவின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ரன்கள் தேவை!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்தியாவின் வெற்றிக்கு 24 பந்துகளில் 54 ரன்கள் தேவை.

கோலி ரன்களுடனும் 43, ஹர்டிக் பாண்டியா 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

16:47 (IST) 23 Oct 2022
இந்தியாவின் வெற்றிக்கு 36 பந்துகளில் 70 ரன்கள் தேவை!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வரும் இந்தியாவின் வெற்றிக்கு 36 பந்துகளில் 70 ரன்கள் தேவை.

கோலி ரன்களுடனும் 34 , ஹர்டிக் பாண்டியா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

16:34 (IST) 23 Oct 2022
4 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா… ரன் சேர்ப்பதில் திணறல்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இந்திய அணி துரத்தி வருகிறது. தற்போது 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி ரன்கள் சேர்க்க திணறி வருகிறது.

15:25 (IST) 23 Oct 2022
இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக இப்திகார் அகமது 51 ரன்களும், ஷான் மசூத் 52 ரன்களும் எடுத்தனர்.

15:18 (IST) 23 Oct 2022
19 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்துள்ளது.

ஷான் மசூத் 51 ரன்களுடனும், ஷஹீன் அப்ரிடி 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

15:02 (IST) 23 Oct 2022
16 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்களை எடுத்துள்ளது.

14:58 (IST) 23 Oct 2022
முகமது நவாஸ் அவுட்!

ஹர்திக் பாண்டியா வீசிய 15.5 ஓவரில் முகமது நவாஸ் 9 ரன்கள் எடுத்தானில் தினேஷ் கார்த்திக் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

14:53 (IST) 23 Oct 2022
15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்துள்ளது.

14:49 (IST) 23 Oct 2022
அடுத்தடுத்த விக்கெட் இழப்பு; ரன் சேர்க்க திணறும் பாகிஸ்தான்!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்துள்ளது.

14:42 (IST) 23 Oct 2022
இப்திகார் அகமது அவுட்!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் மிடில் ஆடர் வீரர் இப்திகார் அகமது ஷமி வீசிய 12.2 ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

13 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 96 ரன்களை எடுத்துள்ளது.

14:40 (IST) 23 Oct 2022
அக்சர் ஓவரில் சிக்ஸர்களை பறக்க விட்ட இப்திகார் அகமது!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் மிடில் ஆடர் வீரர் இப்திகார் அகமது அக்சர் வீசிய 12வது ஓவரில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

14:35 (IST) 23 Oct 2022
10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான்!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 60 ரன்களை எடுத்துள்ளது.

14:31 (IST) 23 Oct 2022
முதல் பந்திலேயே பெரிய மீனை தூக்கிய அர்ஷ்தீப் சிங்: இன் ஸ்விங்கருக்கு பலியான பாபர் அசாம்

இந்திய இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய இன் ஸ்விங் பந்தை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் எல்பிடபிள்யூ ஆகி பூஜ்ஜிய ரன்னில் வெளியேறினார்.

முதல் பந்திலேயே பெரிய மீனை தூக்கிய அர்ஷ்தீப் சிங்: இன் ஸ்விங்கருக்கு பலியான பாபர் அசாம்
14:01 (IST) 23 Oct 2022
பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடியை காலி செய்த அர்ஷ்தீப் சிங்…!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் (0) – முகமது ரிஸ்வான் (4) ஜோடியை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தி அசத்தியுள்ளார். அவரது இருவரும் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர்.

13:45 (IST) 23 Oct 2022
கேப்டன் பாபர் ஆசம் அவுட்!

டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசம் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் எல்பி டபிள்யூ ஆகி பூஜ்ஜிய ரன்னில் வெளியேறியுள்ளார்.

13:37 (IST) 23 Oct 2022
களத்தில் பாகிஸ்தான்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி களமிறங்கியுள்ளனர். முதலாவது ஓவரை புவி வீசுகிறார்.

13:13 (IST) 23 Oct 2022
இந்தியா பிளேயிங் லெவன்!

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்


13:13 (IST) 23 Oct 2022
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்!

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா

13:13 (IST) 23 Oct 2022
டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு; பாக்., அணி முதலில் பேட்டிங்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யும்

13:03 (IST) 23 Oct 2022
மெல்போர்ன் மைதானம் எப்படி?

உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்டதாகும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சமஅளவில் கைகொடுக்கும் இந்த ஆடுகளத்தில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும்.

இந்த மைதானத்தில் இதுவரை 15 சர்வதேச 20 ஓவர் போட்டிகள் அரங்கேறி இருக்கின்றன. இங்கு இந்திய அணி 4 டி-20 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. பாகிஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் ஆடி, அதில் தோல்வி அடைந்துள்ளது.

13:01 (IST) 23 Oct 2022
பதிலடி கொடுக்குமா இந்தியா?

உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகள் இடையிலான மோதலில் இந்தியாவின் கையே மேலோங்கி இருக்கிறது. ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை போட்டியில் 7 முறையும் இந்திய அணியே பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

டி-20 உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 6 முறை மோதியதில் இந்தியா 5 முறை வெற்றி கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தி ஒரே ஒரு வெற்றியை கண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இதனால் பாகிஸ்தான் அணி முந்தைய போட்டியில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

அதேநேரத்தில் கடந்த உலக கோப்பையில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தீவிரம் காட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்று எளிதில் சொல்ல முடியாது. அதேநேரத்தில் நெருக்கடியை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் நிச்சயம் கூறலாம்.

12:58 (IST) 23 Oct 2022
சூப்பர் 12-ல் இந்தியா மோதும் அணிகள் பட்டியல்!

இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

T20 World Cup: முடிவுக்கு வந்த தகுதி சுற்று… சூப்பர் 12-ல் இந்தியா மோதும் அணிகள் இவைதான்!
12:54 (IST) 23 Oct 2022
இந்தியா vs பாகிஸ்தான்: பவுண்டரி தூரம்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் மெல்போர்ன் மைதானத்தின் பவுண்டரி தூரம்.

12:47 (IST) 23 Oct 2022
டி-20 உலகக் கோப்பை: இந்தியா vs பாகிஸ்தான் – வார்ம்-அப்பில் கோலி!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா இன்று 1:30 மணிக்கு களமிறங்க உள்ள நிலையில், தற்போது இந்திய அணியினர் வார்ம்-அப் செய்து கொண்டுள்ளனர். இதில் கோலி வார்ம்-அப் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

12:35 (IST) 23 Oct 2022
இந்தியா vs பாக்கிஸ்தான்: உத்தேச வீரர்கள் பட்டியல்!

பாகிஸ்தான்

பாபர் அசாம் (கேட்ச்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹைதர் அலி, இப்திகார் அகமது, ஆசிப் அலி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் ஷா அப்ரிடி

இந்தியா

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் அல்லது முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

12:27 (IST) 23 Oct 2022
பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல்!

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஷான் மசூத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹைதர் அலி, இப்திகார் அகமது, ஆசிப் அலி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப், ஷஹீன் அப்ரிடி, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது வாசிம் ஜூனியர், ஃபகார் ஜமான்

12:26 (IST) 23 Oct 2022
இந்திய அணி வீரர்கள் பட்டியல்!

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சாஹல் , தீபக் ஹூடா.

12:24 (IST) 23 Oct 2022
‘பாகிஸ்தானை வெல்ல ரத்தம், வியர்வை, கண்ணீரரைத் தருவேன்’ – ஹர்டிக் பாண்டியா!

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது சமூக வலைதள ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

12:20 (IST) 23 Oct 2022
பாகிஸ்தான் அணி எப்படி?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் பாபர் அசாம், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஷான் மசூத் ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். இதில் தொடக்க வீரர்களான பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி நிலைத்து நின்று விட்டால் பவுலர்களுக்கு தலைவலியாக இருப்பார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஷதப்கான் ஆகியோர் மிரட்டக்கூடியவர்களாக உள்ளார்கள்.

கடந்த உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வீழ்த்தி மிரட்டி இருந்தார்.

11:48 (IST) 23 Oct 2022
இந்திய அணி எப்படி?

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு உலக கோப்பை போட்டிக்காக முன்கூட்டியே ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள சூழலுக்கு ஏற்ப அணி தயார்படுத்திக் கொண்டது. மேலும், அங்கு நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது.

இந்திய அணி பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் என்று பெரும் பட்டாளமே இருக்கிறது. மிடில் -ஆடரில் களமாடும் சூர்யகுமார் அபார பார்மில் இருக்கிறார்.

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது பின்னடைவு என்றாலும் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அந்த இடத்தை நேர்த்தியாக நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்கும், சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், அக்‌ஷர் பட்டேலும் நல்ல நிலையில் உள்ளனர்.

11:22 (IST) 23 Oct 2022
மெல்போர்னில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் மெல்போர்ன் மைதானத்திற்கு வெளியில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11:12 (IST) 23 Oct 2022
மெல்போர்ன் லேட்டஸ்ட் வெதர் ரிப்போர்ட்!

மெல்போர்னில் வானிலை கடவுள்கள் புன்னகைப்பது போல் தெரிகிறது. இங்கு காலை முதல் மழை பெய்யாததால், உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியாக மூச்சு விடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மெல்போர்ன் சிட்டியில் இருந்து வரும் லேட்டஸ்ட் அப்டேட்களின்படி, “இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் நாளில் மெல்போர்னில் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளது. அது பெரும்பாலும் இன்று மாலைக்குப் பிறகு இருக்கும். புறநகரின் வழக்கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று தென்கிழக்கு திசையில் மணிக்கு 20 முதல் 30 கி.மீ வேகத்தில் வீசும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:01 (IST) 23 Oct 2022
‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு – க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Web Title: Ind vs pak t20 world cup 2022 live score in tamil